தினமலர் வாரமலர் 18/12/2022
Posted on: Tuesday, December 27, 2022
வா வாழ்ந்து பார்க்கலாம்....
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
10:22 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakkumar,
saravanakumar,
அனுபவம்,
இதயம் பேசுகிறது,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்
Posted on: Tuesday, December 6, 2022
பயணத்திற்கு உதவாத மாய கப்பல்...
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
1:26 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakkumar,
saravanakumar,
இலக்கியம்,
உரத்த சிந்தனை,
எஜமான்,
எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted on: Monday, May 16, 2016
உரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:36 PM
2
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Thursday, October 23, 2014
வடலிமரம் நாவல் மதிப்புரை ..(விமர்சனம்) ....
வடலிமரம் நாவல் மதிப்புரை ..
ஆணோ
, பெண்ணோ பதின் பருவத்தை கடந்த எல்லோரும்
எதாவது ஒரு விதத்தில் காதலை கடந்து தான் வந்திருப்பார்கள் என்பது உண்மையானால், நிச்சயம்
இந்த விடலிமரம் நாவலை படித்து முடிக்கையில் அந்த உணர்வை மறுமுறை அனுபவித்து மகிழ்ந்திருப்பர்
….!
பதின் பருவத்தினரின்
மெல்லிய காதல் உணர்வை இவ்வளவு அழகாக, இயல்பாக யாராலும் மொழி பெயர்த்திருக்க முடியாது, என் நண்பர் ஐரேனிபுரம் பால்ராசையாவை தவிர என இந்த
நாவலை முடிக்கும் போது பெருமைப்பட்டேன்.
பனை ஏறிகள்
என்று அழைக்கப்படும் அழிந்து வரும், மறக்கப்பட்டு வரும் ஒரு வரிய இனத்தின் வாழ்கை முறையோடு, பதின் பருவ காதலை பிணைத்து மார்தாண்டம் குழித்துறை திருவட்டாறு என்று தென் தமிழகத்தின் பத்து வருடத்திற்கு முன்புள்ள
கால கட்டத்திற்கு நமது பதின் பருவ நினைவோடு பயணப்பட வைக்கிறார் நாவலாசிரியர் பால்ராசய்யா.
காதலுக்கு பெற்றோர்களையும்
தாண்டி இந்த சமூக மற்றும் பொருளாதார காரணிகள் எவ்வளவு பெரிய எதிரி என்பதை அரிதாரமில்லாமல்
இயல்பாய் காதல் வெற்றி பெற்றாலும் சமூக போருளாதாரத்தில்
தோற்றுப்போன கணவன் மனைவியாய் படும் துயரத்தையும்
அவர்கள் பெற்றோரால் பிரிக்கப்படுவதையும் இயல்பாய்
சொன்னவிதம் அனுபவிக்க வைக்கிறது
பதின் பருவ
காதல் உணர்வை மறுபடியும் சுமக்க விரும்பும் அணைவரும் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் வடலிமரம்.
நாவல் வேண்டுவோர்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9791820195/09020711128
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
11:16 PM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Friday, August 15, 2014
காலைக்கதிர் வாரக்கதிரில் எனது இரண்டாவது சுதந்திரம் - 68 வது சுதந்திர ஆண்டிலாவது நிறைவேறுமா ...?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:19 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
கவிதை,
காலைக்கதிர்,
சமூகம்,
சுதந்திரதினம்,
வாரகதிர்
சுதந்திர தினத்தில் தினமலரில் எஸ். ஏ.சரவணக்குமாரின் மன்னிப்புக் கடிதம் ...
ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!
நெஞ்சில் துப்பாக்கி ரவையை
பதக்கமாய் அணிவித்து,
ஓட்டுப் போட பணம்
பெற்றுக் கொள்கிறோம்!
'ஜாதிகள் இல்லையடி பாப்பா'
என்றவனின் நினைவு நாளில்,
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம்!
செக்கிழுத்து பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மாக்கில் தேடுகிறோம்!
வெள்ளையன்,
"அவுட் ஆப் பேஷனாய்' போனதால்,
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது!
அடிமைத் தனத்தையும்,
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக் கொண்டோம்!
எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக் கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ, மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு!
மகாத்மாவே...
பாரதியே...
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள்!
எங்களுக்காக நீங்கள்
சிந்தும் ரத்தத்தை கூட,
"என்ன குரூப்' என வகை பிரித்து
காசாக்கி விடுவோம்!
கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம்!
உங்களிடம்,
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை!
எங்களை திருத்த
இனி நீங்கள்
கைத்தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும்...
வருவீர்களா?
நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
1:07 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
கவிதை,
சமூகம்,
சரவணக்குமார்,
சுதந்திரதினம்,
தினமலர்,
வாரமலர்
Posted on: Monday, May 5, 2014
நான் ஆணாதிக்கவாதியா? சாடிஸ்டா ? உங்கள் உணர்வோடு ஒப்பிட்டு சொல்லுங்கள் - எஸ்,ஏ,சரவணகுமார்
பல முரண்பட்ட கருத்து மோதல்களுக்கு இடையே வெளிவந்த இந்த சிறுகதை என்னை ஆணாதிக்கவாதி என்ற நிலையில் இருந்து சாடிஸ்ட் என்ற நிலைக்கு உயர்த்தியது.
இந்த கதையை படித்துவிட்டு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் முன்வைத்தால் அதை தலைவணங்கி ஏற்கிறேன் …. ஒரு சிறு வேண்டுகோள், இந்த கதையை ஒரு பார்வையாளனாக இருந்து விமர்சிப்பதை விட கதைமாதர் இடத்தில் உங்களை/உங்கள் குடும்பத்தில் ஒருவரை இருத்தி பார்த்துவிட்டு விமர்சிக்கவும் …. - எஸ்.ஏ.சரவணக்குமார்
இந்த கதையை படித்துவிட்டு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் முன்வைத்தால் அதை தலைவணங்கி ஏற்கிறேன் …. ஒரு சிறு வேண்டுகோள், இந்த கதையை ஒரு பார்வையாளனாக இருந்து விமர்சிப்பதை விட கதைமாதர் இடத்தில் உங்களை/உங்கள் குடும்பத்தில் ஒருவரை இருத்தி பார்த்துவிட்டு விமர்சிக்கவும் …. - எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:18 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
கதை,
சமூகம்,
சிறுகதை,
சினிமா,
நிகழ்வுகள்,
புரட்சிவேந்தன்,
புனைவுகள்
Posted on: Friday, May 2, 2014
என் பாதை எங்கும் மனிதர்களை காணவில்லை ,,,
பாபர் மசூதி இடிக்கப்பட்டு
அந்த பலியை இராமர் மேல் போட்ட தினத்திற்கு அடுத்த நாள் … எனது மாணவப்பருவத்தில் இந்த சமூகத்தில் பாடம் படித்துக்
கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன், பாபர் மசூதி இடிப்பில்
உயிர் இழந்தவர்களின் உடல்கள் வருசையாய் மனைவியை குழந்தைகளை நிராதரவாய்விட்டு விட்டு
…… அந்த இழப்பை அரசியலாக்கிய கட்சியின் கொடி
போத்தி, வருசையாய் இருபதிற்கும் மேற்பட்ட உடல்கள் சென்னை வில்லிவாக்கம் இடுகாட்டை நோக்கி
சென்று கொண்டிருந்தன ….. இதயம் வலிக்க அப்போது எழுதிய கட்டுரை ….. இன்று சென்னையில் குண்டு வெடிப்பில் பலி, பலர் காயம்
என்ற செய்தி கேட்ட போது ஏனோ அன்று எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது ,,,,,
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:17 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Wednesday, April 30, 2014
முகத்தில் முகம் பார்த்து நான் இலக்கியவாதியான கதை……
என்பதுகளின் இறுதியில்,
தொன்னுறுகளின் ஆரம்பகாலம், இனிய என் இனிய மாணவ பருவத்தில் ….. இலக்கிய எழுத்தாளர்களை அன்னாந்து பார்க்கப்பட்ட
காலகட்டம்,
எனக்கு தெரிந்த
இலக்கியம் எல்லாம் இரண்டு மதிப்பெண் தரும் நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா ……, அதில்
கூட இந்த புளிமா மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு ‘ட்வுட்டு’ அப்புறம் ரொம்ப நாள் கழித்துத்தான் தெரிந்தது, பள்ளிகூட
வாசல்ல பாட்டி விற்கிற புளிச்ச மாங்காவுக்கும் இந்த புளிமாவுக்கும் சம்பந்தமில்லைன்னு
…..
நமக்கு தெரிந்த
இலக்கியம் எல்லாம் அன்னைக்கும், இன்னைக்கும் அவ்ளோ தான்,
அப்படிப்பட்ட காலகட்டத்துலத்தான்
ஒரு லைப்ரரில முகம் மாத இதழ் அறிமுகமானது,
படிக்க படிக்க ஏதோ ஒன்று என்னை தன் பால் இழுக்க, அதற்கு முந்தைய இதழை எல்லாம்
லைப்ரரியன்கிட்ட கெஞ்சி பழைய ஸ்டோர் ரூமை கிளரி படித்த போது ஒரு இதழில் நல்ல இலக்கியத்தரமான
சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி அதன் ஆசிரியர் திரு,மாமணி அவர்கள் சிறு குறிப்பு வெளியிட்டு
இருந்தார், கூடவே போன் நம்பர், முகவரி,
திரும்ப அந்த இலக்கியம்ன்ற
அல்ஜிப்பிரா ( நமக்கு ரெண்டும் ஒன்னுத்தான் )
மண்டைய குடைய வெளிய வந்து பொது தொலைபேசியில் இருந்து டிரிங் ,,, டிரிங் ,,,
“முகம் மாத இதழா…?”
“நீங்க”
“….. எனக்கு கதை
எழுத ஆசை ,,, இலக்கியம்னா என்னன்னு தெரியாது …. என் கதையை முகத்துல வெளியிடுவீங்களா…?”
“தம்பி நான் ஆசிரியர்
மாமணித்தான் பேசுற ….நீங்க என்ன பண்றீங்க? “
“பச்சையப்பன் கல்லூரில
படிக்கிற ,,”
மறுமுனையில் சிரித்தபடியே,
“அனுப்பிவைங்க நல்லாயிருந்தா கண்டிப்பா போடுற ,,,”
அதே நம்பிக்கையில்
ஏதோ கிறுக்கி அனுப்பிவிட்டு மறந்து போன அடுத்த வாரம் முகம் மாமணி அவர்களிடம் இருந்து
கடிதம் ,,,வெளியிட தேர்வு செய்திருப்பதாகவும் கூடவே என் புகைப்படம் கேட்டு ….. அந்த
கணம் … இலக்கியவாதி அங்கிகாரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தலைகால் புரியாமல் வண்ணத்து
பூச்சியாய் என்னை சுற்றியது ……
அந்த நிமிர்ந்தால் வாணம் சிறுகதை உங்களுக்காக …..
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
12:59 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கதை,
சமூகம்,
சிறுகதை,
முகம்,
விமர்சனம்
Posted on: Tuesday, January 14, 2014
தினத்தந்தி ஞாயிறு மலரில் " எனது நல்ல மனசு"
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:32 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கதை,
சமூகம்,
சிறுகதை,
ஞாயிறுமலர்,
தினத்தந்தி
Posted on: Friday, September 27, 2013
இப்படிக்கு, காதல் …
இப்படிக்கு, காதல் …
விடியலில் படுக்கையை விட்டு
எழும் முன்
கடைசி ஐந்து நிமிட
தூக்கத்தைப்போல் சுகமானது
காதல் …..!
இதயம்
தாய்மை அடைந்து தவிக்கும் …!
குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ..
முழு மனிதனாய் மறு பிரசவிப்பது, காதல் …!
ஒத்த உணர்வுகள்
தனி உலகில் புணர,
விதவனைப்போல்
தனிமைப்படுத்தி வைத்திருக்கும்
இன்ப அவஸ்த்தை
காதல் …!
நான்
நீ
என்று யாரோவாக இருந்த நாம்,
நான், நீயாகவும்
நீ, நானாகவும்
வளர்சிதை மாற்றத்தால்
“நாம்” ஆக்கிவைக்கும் காதல் ….
நீயும்
நானும்
நாமாக போகும்
வளர்சிதை மாற்றத்திற்காய்
காத்திருக்கிறேன் …
காதலில் காத்திருத்தல்
மட்டுமே பல நூற்றாண்டுகலாய்
காதலை சாகாமல்
வைத்திருக்கிறது என்றாய் ….
காத்திருப்பேன் …
உன் வார்த்தையை
வாழவைக்கவேணும் ….
உனக்காக ….
- எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:34 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்,
சமூகம்,
நிகழ்வுகள்,
விமர்சனம்
Posted on: Thursday, September 26, 2013
உன்னில் தொலைந்த என்னை ….
இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம்
நாணத்தோடு விட்டுப்பிரிய
மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி
போல் உன் நினைவுகள் ….
கரை மோதி
காதலியை காணாமல்
ஏமாற்றத்துடன்
கரையிலேயே காத்துக்கிடக்கும்
கடற் நுரை
போல் என் உயிர்
உனக்காக காத்துக்கிடக்கிறது ….!
கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர ,
"அம்மா" என்று நான் அலற
"அச்சச்சோ '" என
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப்பார்வை ...
அன்று
உன் பார்வை
தந்த போதையில் அடிமையான
என் பாதங்கள்
உன்னை காணும் போதெல்லாம்
பாதையில் கற்க்களை தேடுகின்றன …
மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
பொழுதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகள்
என்னுள் பசலையை
கிளறிவிட்டு
போய்விடுகிறது ….!
நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிசமாய்
என்னுடன் ...
உன் நினைவுகளில்
என்னை நான்
புதுப்பிக்கிறேன் ....
சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன் ...!
ஊர் எல்லையில்
தனியே நிற்கும்
சுமை தாங்கியைப்போல்
சுகமான உன் நினைவுகளை தாங்கி
காத்துக்கிடக்கிறேன் ....
உன்வருகைக்காக …
உன்னில் தொலைந்த
என்னை
என்னிடம் திருபித்தர
என்னிடம் நீ வருவாயா …?
- எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:22 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
காதல்,
சமூகம்,
நிகழ்வுகள்,
புனைவுகள்,
விமர்சனம்
Posted on: Tuesday, August 20, 2013
சுயம் தொலைத்தவளே ....!
சுயம் தொலைத்தவளே ....!
இரத்தத்தை அமுதாக்கி
கருவறையில்
பாரம் சுமந்து
உன் வேதனையில்
என்னை வெளிக்காற்றை
சுவாசிக்க வைத்தவளே ...
ஊன் தந்தாய்
உதிரம் தந்தாய்
உயிர் தந்தாய்
நானே உன் உலகம்
என்று ஆனந்தப்பட்டாய் ...
என் கோர முகம்
கோணாதிருக்க
இயல்பு மாற்றி
சுயம் தொலைத்தாய் ...
உன்
உலகை என்னைச்சுற்றி
அமைத்துக்கொண்டாய் ...
வறுமையிலும்
ஈர விறகோடு விறகாய்
பொசுங்கி
என் வயிற்றுப்பசி தீர்க்க
உன்
வயிற்றளவை குறுக்கினாய் ...
நான் மிடுக்காய்
உடை உடுத்தி பள்ளி செல்ல
நீயோ
ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய் ....
கருவறையில்
மட்டுமல்ல
நான்
வளரும் போதும்
உன் இரத்தம் குடித்துதான்
வளர்ந்தேன் ...
மனிதனாய் என்னை
வெளியுலகிற்கு
காட்டியவளே ...
இன்று
இரக்கமற்ற முதுமை
உன் உடலை செல்லாய்
அரித்து செல்லாக்காசாய்
படுக்கையில் குழந்தையைப்போல்
கிடத்தியிருக்கிறது ....
எனக்காய் முழுமையாய்
சுயம் மறந்து,
தொலைந்து, கரைந்து
போனவளே ....
உனக்கு நான்
தாயாய் ...
எனக்கு நீ
குழந்தையாய்
ஆகும்
பாக்கியத்தை தவிர
வேறு என்ன
பிரயாசித்தம்
செய்து விட முடியும் ....?
- எஸ்.ஏ.சரவணக்குமார்
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
8:29 AM
3
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
நிகழ்வுகள்,
விமர்சனம்
Posted on: Sunday, July 21, 2013
தினமலர் வாரமலரில் ஒரு கைப்பிடி வாழ்க்கை
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
12:26 PM
2
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Thursday, June 27, 2013
குமரி மாவட்ட கருங்கல் வட்டார தொழில் வர்த்தக மேம்பாட்டு சங்க சிறப்பு (2013) மலரில் எனது ஒரு முறையே பூக்கும் பூவிது ... கவிதை
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
6:18 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakumar,
அனுபவம்,
கவிதை,
காதல்,
குமரி மாவட்டம்,
சமூகம்,
சினிமா
Posted on: Sunday, June 23, 2013
தினமலர் வாரமலரில் வாழ்க்கை நாடகம் ..!
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
4:53 AM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakumar,
அரசியல்,
அனுபவம்,
கவிதை,
சமூகம்,
சினிமா,
தினமலர்,
வாரமலர்,
விமர்சனம்
Posted on: Tuesday, May 28, 2013
தோள் தருவாயா .....?
தோள் தருவாயா .....?
நானறியாமல்
என்னுள் முழுமையும்
நிறைந்தவளே ...
நீ நிறைந்திருக்கும்
எனது கணங்கள்
என்னை எனக்கு
அடையாளப் படுத்துகின்றன ...!
பூ விழுந்தால்
நீ ஜெயித்தாய்
தலை விழுந்தால்
நான் தோற்றேன் ...
நீ விளையாடும் புதிரான
காதல் விளையாட்டு ....
உன்னைப் பார்த்த
கண்களால் எதைப்பார்த்தாலும்
அழகாய் தெரிகின்றன ...
நான் உள்பட ....!
மரணத்திற்கும்
வாழும் ஆசைக்கும்
இடைப்பட்ட மரணசுகம்
உனக்காக காத்திருக்கும்
நொடிகள் ....!
ஊர் கூடி தேர் இழுக்க
நாம் கண்களால்
ஒருவரை ஒருவர்
இழுத்துக்கொண்டோம் ....
புளி மாங்காய்
தேமாங்காய் ...
ஆசிரியர் பாடம் நடத்தும் போது,
எனக்கு நீ கடித்து கொடுத்த
மாங்காய் தான் இலக்கணமாய்
தெரிந்தது .....
இவை எல்லாம்
நேற்று வரை நடந்தவைகள் ....
காதல்
கற்பனையானது ...
அழகானது ....
காதல் மட்டுமாயின்,
காதல் சுகம் ....!
அடுத்த பரிணாமம்
நிஜம் ....!
சுற்றம்
பொருளாதாரம்,
வகுப்பு வாதம் பேசும் ...
சரி .. நமக்கு நாமே
துணையென உறவு பகைத்து
வாழ்கை நடத்தகூட
பொருளாதாரம் அதிமுக்கியம் ....!
அதனால் ,
காதலை நம்முள்
பகிர்ந்துக் கொள்ளும் முன்
சுயகாலில் நின்று ...
நம் வெற்றியை உன்
கன்னங்களுடன் கொண்டாட
விரும்புகிறேன் ...
அதுவரை,
என் உயிர் குடிக்கும்
மாயக்காரியே ....
நான் துவண்டு விழும்
பொழுது எல்லாம்,
உன் பார்வையால்
எனக்கு தோள் தருவாயா ....?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
10:59 PM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Posted on: Tuesday, April 9, 2013
கடைசி பிச்சை …(ஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம் - சிறப்பு கவிதை )
ஊனப்பட்டுப்போன
மனம் படைத்தோர்
வாழும் உலகில் …
சிற்பியின் கவனச்சிதறல்களால்
சிதறிப்போன
கண்ணாடி சிதறல்கள்
நாங்கள்.....
ஊனமனது வார்த்தை
பிரதிபலிப்பால்
சுருங்கி துடிப்பது
"எங்கள் இதயம் மட்டுமல்ல
எங்களின் மனமும் தான் ....!
ஆண்பால் ...
பெண்பால் ...
என்று பிரிக்க தெரிந்த
வக்கிர மனதுக்கு
மூன்றாம் பாலினத்தை
உச்சரிக்க தைரியமில்லை ....!
உடல் ஊனம் என்றால் கூட
செயற்கை உறுப்புகள் உண்டு ...
மன ஊனத்திற்கு ....?
மாற்று பாலினம் என்று
ஒதுக்கியதால்,
பசியரக்கன் முன்
பிச்சைக்காரர்களாய் ...
பால் மாறிப்போனதால்
பாலியல் வெறியர்களில்
பார்வையில் பாலியல்
தொழிலாளியாய் ....
இறைவனை நோவலாம்
என்றால்,
அவனும் கூத்தாண்டவர் கோவிலில்
எங்களுக்கு போட்டியாய் ....
இனி பொறுப்பதில்லை ...
குட்ட, குட்ட குனிந்து
கூன் போட்ட புற முதுகும்
எங்களுக்கு தேவையில்லை ....
மனிதர்கள் வாழ வேண்டிய
பூமியில்
மனிதத்துவம் மறந்து
வாழ்வோரே ...!
உங்களிடம் எங்களின்
கடைசி பிச்சை ....
எங்களை நீங்கள்
மூன்றாவது பாலினமாய்
ஏற்றுக்கொள்ள வேண்டாம் ....
அது எங்கள் உரிமை ...!
தரங்கெட்ட வார்த்தையால்
மனதை காயப்படுத்துவதை
தவிருங்கள் ...!
தெருவில்,
தெரு நாயை கல்லெடுத்து
அடித்தால் கூட,
கேட்க ப்ளூ கிராஷ்
என்று ஓன்று உண்டு ....
எங்களுக்கு ....?
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதர்களுடன் மனிதர்களாய்
வாழ ஆசைப்படுகிறோம் ....!
கடைசி பிச்சையாய் ....
சக மனிதா ….!
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதனாய் வாழ்வாயா ….?
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
11:14 PM
1 comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
அரவாணி,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்,
திருநங்கை,
நிகழ்வுகள்
Posted on: Saturday, January 19, 2013
அலெக்ஸ் பாண்டியன் - விமர்சனம்
இப்பலா சுவிஸ்
போங்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண கெடுபிடி அதிகமா இருக்கேன்னு பீல் பண்றவங்க, ஏமாத்துன பணமோ இல்ல லஞ்ச
பணமோ உங்ககிட்ட அதிகமா இருந்தா நீங்க அலெக்ஸ் பாண்டியன் பட பேனரை எந்த தியேட்டர்ல பார்த்தாலும்
தாராலமா டிக்கட் எடுத்துட்டு படம் பார்க்க போகலாம்.
கதைன்னு பார்க்கபோனா,
புளிச்சு போன மாவுல மாசால் தோசையை சுட்டு, அதை மறைக்க மேல முந்திரியையும் பாதாமையும்
தூவி பரிமாறிய கதை.
தடைசெய்யப்பட்ட
மருந்தை தமிழ் நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கிடைக்காததால், அவர் மகளை கடத்தி,
மிரட்டி அனுமதி கேட்கிறது வில்லன் கூட்டம்.
அவர்கள் முதலமைச்சர் மகளை கடத்த கூலிக்கு அமர்த்தியவன் தான் கதாநாயகன், உண்மை
தெரிந்து வழக்கம் போல் கதாநாயகியை காப்பாற்றி முதலமைச்சரிடம் ஒப்படைக்கிறான், கதாநாயகன்.
கதாநாயகனும் கதாநாயகியும்
இருந்தா லவ்வியே ஆவணும் என்கிற தமிழ்நாட்டு இரசிகனின் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாமல்,
லவ்வூவூவூவூவூ ..
கை நீட்டி காசு
வாங்கிட்டோமேன்ற குற்ற உணர்ச்சில கார்த்திக்கும் பாவம் ரயில் மேலலா பறந்து, பறந்து
சண்டை போட்டு இருக்காரு. அனுஷ்காவும் காசு
வாங்கிய பாவத்திற்கு தொடைய காட்டியிருக்காங்க.
படத்துல உருப்படியான
விசயமே சந்தானம் காமடித்தான். தெரியாம காசு
கொடுத்து டிக்கட் எடுத்தவங்க, காமடிக்காக காசு கோடுத்ததா நினைத்துக் கொள்ளலாம். அதையும்
பிட்டு, பிட்டா ஆதித்தியாவுல போட்டுடுவாங்க.
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
2:56 AM
2
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakumar,
அலெக்ஸ் பாண்டியன்,
அனுபவம்,
கதை,
காதல்,
சினிமா,
நிகழ்வுகள்,
விமர்சனம்
Posted on: Wednesday, January 2, 2013
காமத்தில் தாய்மை தேடல் ....
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரு போதும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காமம் நிறைவடைவதில்லை, | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய்மை தேடலில் …! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காமம் ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அது, | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆழ் மனதின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய்மை தேடலில் தோற்ற | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்ணீர் துளிகள் ...! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரிய குழந்தைகளின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய்மை தேடல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எப்பொழுதுமே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காமத்தில் இருந்துத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொடங்குகிறது .... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சில சமயம் காமம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
என தவறாக அர்த்தம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெண்களின் மார்பின் மீது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்களுக்கு ஈர்ப்பு உண்டு ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அது காமத்தை தாண்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தன் தாயின் பால் சுரந்த | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெது வெதுப்பின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேடலின் எச்சம் ...! | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காமம் எப்போதும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எல்லோருக்கும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காமமாகவே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருந்துவிட முடிவதில்லை ... | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சில நேரங்களில் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பல நேரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மனதிற்கும் காமம் உண்டு, | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய்மை தேடலில் ...! |
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
11:47 AM
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
kavithai,
saravanakkumar,
saravanakumar,
அனுபவம்,
எஸ்.ஏ.சரவணக்குமார்,
கவிதை,
சமூகம்
Posted on: Friday, November 23, 2012
என் முதல் காதலியை இழந்து விட்டேன் …..
வயசாயிட்டாவே
…. இனி புரோயோஜனம் இல்லன்னு தெரிஞ்சிட்டா … கூடவே, மேனா மினுக்கியா ஒருத்தி வந்துட்டா
… அது வரை கை கோர்த்து கூட வந்தவளை அப்படியே விட்டுட்டு போறதுதானே மனித கூட்டம்..?
நான் மட்டும் விதிவிலக்கா என்ன…?
என் காதலியை
பிரியும்படியா ஆயிடிச்சு. அதுவும் பதினோரு
வருசமா … என் கூட இளைச்சிக்கிட்டு வந்தவள … என் மனைவி கூட எனக்காக இப்படிலா கஸ்டப்பட்டதில்ல
....
நான் மழைல நனையும்போது நனைந்து, வேகாத வேயில்ல எனக்காக வாசல்லயே காத்து கிடந்து,
என்னை பார்த்த மாத்திரத்துல அதுவரை பட்ட கஸ்டத்தை எல்லாம் மறந்துட்டு காதலோட ஒரு 'லுக்'
விடுவா பாருங்க … அது வரை ஆபிஸ்ல இருந்த டென்சன்லா ஒடிபோய் அப்படியே ஜில்லுன்னு ஆயிடும். அப்படியே பாசத்தோட அவள வருடிக்கிட்டே, ஆபிஸ் விசயத்தலா
அவாகிட்ட சேர் பண்ணிக்கிட்டு வீடு வந்து சேர்ரது …நாளைக்கான புதுவேகத்தை கொடுக்கும்!
காதலை வேற யாரும்
எனக்கு இப்படி காதலோட. தாய் பாசத்தோட சோல்லி கொடுத்தது இல்லை….
மனசே கேக்கல.
அவளை அப்படியே அங்க விட்டுட்டு, புது மேனா மினுக்கியோட வெளிய வரும் போது…. தானே தன்
கனவனுக்கு ரெண்டாவது திருமணம் செஞ்சிவச்சிட்டு அவங்க ஜோடியா வெளிய போகும் போது வழி
அனுப்பிவைக்கிற மனைவி மாதிரி … என்னை பார்த்து 'வுட்டுட்டு போறீயா?' ன்ற மாதிரி ஒரு லுக்
விட்டா பாருங்க பச்! என் உயிர் என்கிட்டயே இல்ல …
சந்தோசமோ, கோபமோ
முதல்ல அவக்கிட்டத்தான் காட்டியிருக்க … அதுக்காக அவா ஒருவாட்டி கூட மொகத்த காட்டுனதுயில்ல
… 'கௌம்பு'ன்னா போதும் சந்தோசமா கௌம்பிடுவா …
என் மகன் எனக்குமேல
'பீல்' பண்ணி அவளை கெட்டிபிடிச்சு கிஸ் பண்ணிட்டு, மனசே இல்லாம வந்தான்.
"இதுக்கு மேல
இதை ரிப்பேர் பார்க்க முடியாது சார்"ன்னு மெக்கானிக் சண்டைக்கு வந்த பிறகு, வேற வழியே
இல்லாமத்தான் என் பழைய டி,வி,எஸ் விக்டரை கொடுத்துட்டு புது டூ வீலர் வாங்கும்படியா
ஆயிடிச்சு.
புது காதலி! புது நட்பு!! ஆனாலும் முதல் காதலை மறக்க முடியாமல்....
Posted by
எஸ்.ஏ.சரவணக்குமார்
at
5:39 PM
4
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Labels:
saravanakumar,
அனுபவம்,
கட்டுரை,
கதை,
கவிதை,
காதல்,
சமூகம்,
நிகழ்வுகள்