Pages

Posted on: Monday, January 4, 2010

கழற்றி எறிந்த முகங்கள்....! [ உரையாடல் போட்டிக்கவிதை]






கழற்றி எறிந்த முகங்கள்....!




பகலின் எச்சங்கள்
இரவை தின்றுக்கொண்டிருக்கின்றன.. !

வெற்றி களிப்புகள்...
குற்ற உணர்ச்சிகள் ...
காரி உமிழப்பட்ட
எச்சில் துளிகள் ஈரமாய் ...

எண் ஜானின்
ஒரு ஜான் எஜமான்
கட்டளையிடுவதால் ...

தன்மானத்தில்
பட்ட எச்சில் துளிகளை,
வழித்து எறிந்துவிட்டு
அடுத்த பொழுதை
எதிர்கொள்ள
புதிதாய்...

கூச்சல்கள்...
கதறல்கள்...
கெஞ்சல்கள்...
அதிகார சத்தங்களின் முன்
கறைந்து போகிறது...!

எளியவனும்
வலியவனாவான்
தன்னைவிட
எளியவன் சிக்க...!

உடல் வளர்க்க
சூடிய பொய் முகங்கள்
இரவில் மெய் முகத்தை
ஏளனம் பேசும்...!

இயலாமை
கண்ணீர் ஓலங்களை
புணர்ந்து பொய் முகங்களை
அறையெங்கும் பிணங்களாய்
கழற்றி போட்டிருக்கும் ...!

கண்ணீர் துளிகள் மட்டுமில்லை ...
வேதாந்தமும் சுகமாய்
உணர்த்தப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு ....?

[ உரையாடல் போட்டிக்கவிதை]
 
Tweet