இப்பலா சுவிஸ்
போங்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண கெடுபிடி அதிகமா இருக்கேன்னு பீல் பண்றவங்க, ஏமாத்துன பணமோ இல்ல லஞ்ச
பணமோ உங்ககிட்ட அதிகமா இருந்தா நீங்க அலெக்ஸ் பாண்டியன் பட பேனரை எந்த தியேட்டர்ல பார்த்தாலும்
தாராலமா டிக்கட் எடுத்துட்டு படம் பார்க்க போகலாம்.
கதைன்னு பார்க்கபோனா,
புளிச்சு போன மாவுல மாசால் தோசையை சுட்டு, அதை மறைக்க மேல முந்திரியையும் பாதாமையும்
தூவி பரிமாறிய கதை.
தடைசெய்யப்பட்ட
மருந்தை தமிழ் நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கிடைக்காததால், அவர் மகளை கடத்தி,
மிரட்டி அனுமதி கேட்கிறது வில்லன் கூட்டம்.
அவர்கள் முதலமைச்சர் மகளை கடத்த கூலிக்கு அமர்த்தியவன் தான் கதாநாயகன், உண்மை
தெரிந்து வழக்கம் போல் கதாநாயகியை காப்பாற்றி முதலமைச்சரிடம் ஒப்படைக்கிறான், கதாநாயகன்.
கதாநாயகனும் கதாநாயகியும்
இருந்தா லவ்வியே ஆவணும் என்கிற தமிழ்நாட்டு இரசிகனின் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாமல்,
லவ்வூவூவூவூவூ ..
கை நீட்டி காசு
வாங்கிட்டோமேன்ற குற்ற உணர்ச்சில கார்த்திக்கும் பாவம் ரயில் மேலலா பறந்து, பறந்து
சண்டை போட்டு இருக்காரு. அனுஷ்காவும் காசு
வாங்கிய பாவத்திற்கு தொடைய காட்டியிருக்காங்க.
படத்துல உருப்படியான
விசயமே சந்தானம் காமடித்தான். தெரியாம காசு
கொடுத்து டிக்கட் எடுத்தவங்க, காமடிக்காக காசு கோடுத்ததா நினைத்துக் கொள்ளலாம். அதையும்
பிட்டு, பிட்டா ஆதித்தியாவுல போட்டுடுவாங்க.
2 comments:
ரொம்ப லேட் விமர்சனம்..நன்று...
இந்த படத்த பாத்ததுக்கே பீல் பண்ணிக்கிட்டு இருக்க அதுல, நீங்க லேட்டுன்னு வேற
Post a Comment