* உதட்டு சூட்டில் அருகாமையை உணரும் சிசுவாய் காத்துக் கிடக்கிறேன் உன் கொலுசொலிக்காக...
* ஆர்கானிக் விஷமாய் உன் பார்வை என்னை சிறுக சிறுக அரித்துக்கொண்டிருக்கிறது!
* பசித்திடும் போது கூட, நீ என்ன சாப்பிட்டுக் கொண்டிருப்பாய் என்ற எண்ணமே மேலோங்குகிறது!
* உன் வீட்டு திரைச் சீலை காற்றுக்கு விலகும் போதெல்லாம் தாயை தேடும் மழலையாய் ஆடும் என் மனம்... ஏமாற்றத்தில் வெளிவந்து விழுந்த வழித்த எச்சில் இலையை கண்ட தெரு நாயாய் சுருங்கி போகிறது!
* உன்னை ஸ்பரிசித்த சுவாச காற்றை ஸ்பரிசிக்க... நீ நடந்து போன பாதையில் தேடி அலைகிறேன்!
* பத்து முறை எழுதியும் பத்தாவது கூட தேறாத நான்... உன் பார்வை என் இதயத்தில் உண்டாக்கிய பூகம்பத்தால் தலையில் இரண்டு கொம்பு முளைத்து சுனாமியாய் சுற்றித் திரிகிறேன்!
* இதெல்லாம், முக்குத் தெரு, குட்டிச் சுவற்றில் கும்பலாய் அமர்ந்திருந்தவர்களுக்கு மத்தியில்... என்னை, உன் பார்வை குறிப்பாய் தீண்டிப்போன கணத்தில் இருந்தது தான்!
* என்னவளே... என்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் உன்னுள்ளும் நிகழ்ந்தனவா?
* ஒரு வார்த்தையில் உள்ளத்தை சொல்லிவிடு... * இல்லை என்ற வார்த்தை மட்டும் நமக்கு வேண்டாமே!
என்னை பற்றி ...? மனிதர்கள் வாழவேண்டிய உலகில் மனிதனாய் வாழ முயற்சி செய்பவன் ... பணி ...? வயிற்று திருப்திக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ...! மன திருப்திக்கு ஒரு மதமிருமுறை இதழில் கௌரவ ஆசிரியர் !!
To know more
sharov_sa@yahoo.co.in
http://www.nellaikavisasaravanakumar.blogspot.com/
https://twitter.com/SASARAVANAKUMAR
http://www.facebook.com/Saravanakumar.S.A
Mobile : +91 9952903300