Pages

Posted on: Thursday, October 23, 2014

வடலிமரம் நாவல் மதிப்புரை ..(விமர்சனம்) ....

வடலிமரம் நாவல்  மதிப்புரை ..


ஆணோ , பெண்ணோ பதின் பருவத்தை கடந்த எல்லோரும் எதாவது ஒரு விதத்தில் காதலை கடந்து தான் வந்திருப்பார்கள் என்பது உண்மையானால், நிச்சயம் இந்த விடலிமரம் நாவலை படித்து முடிக்கையில் அந்த உணர்வை மறுமுறை அனுபவித்து மகிழ்ந்திருப்பர் ….!

பதின் பருவத்தினரின் மெல்லிய காதல் உணர்வை இவ்வளவு அழகாக, இயல்பாக யாராலும் மொழி பெயர்த்திருக்க முடியாது,  என் நண்பர் ஐரேனிபுரம் பால்ராசையாவை தவிர என இந்த நாவலை முடிக்கும் போது பெருமைப்பட்டேன்.

பனை ஏறிகள் என்று அழைக்கப்படும் அழிந்து வரும், மறக்கப்பட்டு வரும் ஒரு வரிய இனத்தின் வாழ்கை முறையோடு, பதின் பருவ காதலை பிணைத்து மார்தாண்டம் குழித்துறை திருவட்டாறு  என்று தென் தமிழகத்தின் பத்து வருடத்திற்கு முன்புள்ள கால கட்டத்திற்கு நமது பதின் பருவ நினைவோடு பயணப்பட வைக்கிறார் நாவலாசிரியர் பால்ராசய்யா.

காதலுக்கு பெற்றோர்களையும் தாண்டி இந்த சமூக மற்றும் பொருளாதார காரணிகள் எவ்வளவு பெரிய எதிரி என்பதை அரிதாரமில்லாமல் இயல்பாய்   காதல் வெற்றி பெற்றாலும் சமூக போருளாதாரத்தில்  தோற்றுப்போன கணவன் மனைவியாய் படும் துயரத்தையும் அவர்கள் பெற்றோரால் பிரிக்கப்படுவதையும்  இயல்பாய் சொன்னவிதம் அனுபவிக்க வைக்கிறது

பதின் பருவ காதல் உணர்வை மறுபடியும் சுமக்க விரும்பும் அணைவரும் தவறாமல் படிக்கவேண்டிய நாவல் வடலிமரம்.
  
நாவல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9791820195/09020711128

Posted on: Friday, August 15, 2014

காலைக்கதிர் வாரக்கதிரில் எனது இரண்டாவது சுதந்திரம் - 68 வது சுதந்திர ஆண்டிலாவது நிறைவேறுமா ...?

நன்றி காலைக்கதிர் வாரக்கதிர்  09/08/2009


சுதந்திர தினத்தில் தினமலரில் எஸ். ஏ.சரவணக்குமாரின் மன்னிப்புக் கடிதம் ...

                  
   ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!


அகிம்சையை போதித்தவனுக்கு,
நெஞ்சில் துப்பாக்கி ரவையை
பதக்கமாய் அணிவித்து,
ஓட்டுப் போட பணம்
பெற்றுக் கொள்கிறோம்!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா'
என்றவனின் நினைவு நாளில்,
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம்!

செக்கிழுத்து பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மாக்கில் தேடுகிறோம்!

வெள்ளையன்,
"அவுட் ஆப் பேஷனாய்' போனதால்,
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது!

அடிமைத் தனத்தையும்,
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக் கொண்டோம்!

எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக் கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ, மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு!

மகாத்மாவே...
பாரதியே...
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள்!

எங்களுக்காக நீங்கள்
சிந்தும் ரத்தத்தை கூட,
"என்ன குரூப்' என வகை பிரித்து
காசாக்கி விடுவோம்!

கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம்!

உங்களிடம்,
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை!

எங்களை திருத்த
இனி நீங்கள்
கைத்தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும்...
வருவீர்களா? 

நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012

Posted on: Monday, May 5, 2014

நான் ஆணாதிக்கவாதியா? சாடிஸ்டா ? உங்கள் உணர்வோடு ஒப்பிட்டு சொல்லுங்கள் - எஸ்,ஏ,சரவணகுமார்


பல முரண்பட்ட கருத்து மோதல்களுக்கு இடையே வெளிவந்த இந்த சிறுகதை என்னை ஆணாதிக்கவாதி என்ற நிலையில் இருந்து சாடிஸ்ட் என்ற நிலைக்கு உயர்த்தியது.


இந்த கதையை படித்துவிட்டு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் முன்வைத்தால் அதை தலைவணங்கி ஏற்கிறேன் …. ஒரு சிறு வேண்டுகோள், இந்த கதையை ஒரு பார்வையாளனாக இருந்து விமர்சிப்பதை விட கதைமாதர் இடத்தில் உங்களை/உங்கள் குடும்பத்தில் ஒருவரை இருத்தி பார்த்துவிட்டு விமர்சிக்கவும் …. - எஸ்.ஏ.சரவணக்குமார்


Posted on: Friday, May 2, 2014

என் பாதை எங்கும் மனிதர்களை காணவில்லை ,,,

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த பலியை இராமர் மேல் போட்ட தினத்திற்கு அடுத்த நாள் …  எனது மாணவப்பருவத்தில் இந்த சமூகத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன், பாபர் மசூதி இடிப்பில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் வருசையாய் மனைவியை குழந்தைகளை நிராதரவாய்விட்டு விட்டு ……  அந்த இழப்பை அரசியலாக்கிய கட்சியின் கொடி போத்தி, வருசையாய் இருபதிற்கும் மேற்பட்ட உடல்கள் சென்னை வில்லிவாக்கம் இடுகாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தன ….. இதயம் வலிக்க அப்போது எழுதிய கட்டுரை …..  இன்று சென்னையில் குண்டு வெடிப்பில் பலி, பலர் காயம் என்ற செய்தி கேட்ட போது ஏனோ அன்று எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது ,,,,,


Posted on: Wednesday, April 30, 2014

முகத்தில் முகம் பார்த்து நான் இலக்கியவாதியான கதை……

என்பதுகளின் இறுதியில், தொன்னுறுகளின் ஆரம்பகாலம், இனிய என் இனிய மாணவ பருவத்தில் …..  இலக்கிய எழுத்தாளர்களை அன்னாந்து பார்க்கப்பட்ட காலகட்டம்,
எனக்கு தெரிந்த இலக்கியம் எல்லாம் இரண்டு மதிப்பெண் தரும் நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா ……, அதில் கூட இந்த புளிமா மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு ‘ட்வுட்டு’  அப்புறம் ரொம்ப நாள் கழித்துத்தான் தெரிந்தது, பள்ளிகூட வாசல்ல பாட்டி விற்கிற புளிச்ச மாங்காவுக்கும் இந்த புளிமாவுக்கும் சம்பந்தமில்லைன்னு …..
நமக்கு தெரிந்த இலக்கியம் எல்லாம் அன்னைக்கும், இன்னைக்கும் அவ்ளோ தான்,
அப்படிப்பட்ட காலகட்டத்துலத்தான் ஒரு லைப்ரரில முகம் மாத இதழ் அறிமுகமானது,  படிக்க படிக்க ஏதோ ஒன்று என்னை தன் பால் இழுக்க, அதற்கு முந்தைய இதழை எல்லாம் லைப்ரரியன்கிட்ட கெஞ்சி பழைய ஸ்டோர் ரூமை கிளரி படித்த போது ஒரு இதழில் நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி அதன் ஆசிரியர் திரு,மாமணி அவர்கள் சிறு குறிப்பு வெளியிட்டு இருந்தார்,  கூடவே போன் நம்பர், முகவரி,

திரும்ப அந்த இலக்கியம்ன்ற அல்ஜிப்பிரா ( நமக்கு ரெண்டும் ஒன்னுத்தான் )  மண்டைய குடைய வெளிய வந்து பொது தொலைபேசியில் இருந்து டிரிங் ,,, டிரிங் ,,,
“முகம் மாத இதழா…?”
“நீங்க”
“….. எனக்கு கதை எழுத ஆசை ,,, இலக்கியம்னா என்னன்னு தெரியாது …. என் கதையை முகத்துல வெளியிடுவீங்களா…?”
“தம்பி நான் ஆசிரியர் மாமணித்தான் பேசுற ….நீங்க என்ன பண்றீங்க? “
“பச்சையப்பன் கல்லூரில படிக்கிற ,,”
மறுமுனையில் சிரித்தபடியே, “அனுப்பிவைங்க நல்லாயிருந்தா கண்டிப்பா போடுற ,,,”
அதே நம்பிக்கையில் ஏதோ கிறுக்கி அனுப்பிவிட்டு மறந்து போன அடுத்த வாரம் முகம் மாமணி அவர்களிடம் இருந்து கடிதம் ,,,வெளியிட தேர்வு செய்திருப்பதாகவும் கூடவே என் புகைப்படம் கேட்டு ….. அந்த கணம் … இலக்கியவாதி அங்கிகாரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி தலைகால் புரியாமல் வண்ணத்து பூச்சியாய் என்னை சுற்றியது ……

அந்த நிமிர்ந்தால் வாணம் சிறுகதை உங்களுக்காக …..
Posted on: Tuesday, January 14, 2014

தினத்தந்தி ஞாயிறு மலரில் " எனது நல்ல மனசு"

12/01/2014


 
Tweet