Pages

Posted on: Friday, September 27, 2013

இப்படிக்கு, காதல் …                                                                      இப்படிக்கு, காதல் …


விடியலில் படுக்கையை விட்டு
எழும் முன்
கடைசி ஐந்து நிமிட
தூக்கத்தைப்போல் சுகமானது
காதல் …..!

இதயம்
தாய்மை அடைந்து தவிக்கும் …!

குழந்தையாய் பிரசவிப்பவள் தாய் ..
முழு மனிதனாய் மறு பிரசவிப்பது, காதல் …!

ஒத்த உணர்வுகள்
தனி உலகில் புணர,
விதவனைப்போல்
தனிமைப்படுத்தி வைத்திருக்கும்
இன்ப அவஸ்த்தை
காதல் …!

நான்
நீ
என்று யாரோவாக இருந்த நாம்,
நான், நீயாகவும்
நீ, நானாகவும்
வளர்சிதை மாற்றத்தால்
“நாம்” ஆக்கிவைக்கும் காதல் ….

நீயும்
நானும்
நாமாக போகும்
வளர்சிதை மாற்றத்திற்காய்
காத்திருக்கிறேன் …

காதலில் காத்திருத்தல்
மட்டுமே பல நூற்றாண்டுகலாய்
காதலை சாகாமல்
வைத்திருக்கிறது என்றாய் ….

காத்திருப்பேன் …

உன் வார்த்தையை
வாழவைக்கவேணும் ….

உனக்காக ….

                                                        - எஸ்.ஏ.சரவணக்குமார்

Posted on: Thursday, September 26, 2013

உன்னில் தொலைந்த என்னை ….


                             உன்னில் தொலைந்த என்னை ….


இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம்
நாணத்தோடு விட்டுப்பிரிய
மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி
போல் உன் நினைவுகள் ….

கரை மோதி
காதலியை காணாமல்
ஏமாற்றத்துடன்
கரையிலேயே காத்துக்கிடக்கும்
கடற் நுரை
போல் என் உயிர்
உனக்காக காத்துக்கிடக்கிறது ….!

கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர ,
"அம்மா" என்று நான் அலற
"அச்சச்சோ '" என
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப்பார்வை ...

அன்று
உன் பார்வை
தந்த போதையில் அடிமையான
என் பாதங்கள்
உன்னை காணும் போதெல்லாம்
பாதையில் கற்க்களை தேடுகின்றன …

மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
பொழுதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகள்
என்னுள் பசலையை
கிளறிவிட்டு
போய்விடுகிறது ….!

நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிசமாய்
என்னுடன் ...

உன் நினைவுகளில்
என்னை நான்
புதுப்பிக்கிறேன் ....

சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன் ...!

ஊர் எல்லையில்
தனியே நிற்கும்
சுமை தாங்கியைப்போல்
சுகமான உன் நினைவுகளை தாங்கி
காத்துக்கிடக்கிறேன் ....
உன்வருகைக்காக …

உன்னில் தொலைந்த
என்னை
என்னிடம் திருபித்தர
என்னிடம் நீ வருவாயா …?

                                                     - எஸ்.ஏ.சரவணக்குமார்

Posted on: Tuesday, August 20, 2013

சுயம் தொலைத்தவளே ....!


                                                   சுயம் தொலைத்தவளே ....!

இரத்தத்தை அமுதாக்கி
கருவறையில்
பாரம் சுமந்து
உன் வேதனையில்
என்னை வெளிக்காற்றை
சுவாசிக்க வைத்தவளே ...

ஊன் தந்தாய்
உதிரம் தந்தாய்
உயிர் தந்தாய்
நானே உன் உலகம்
என்று ஆனந்தப்பட்டாய் ...

என் கோர முகம்
கோணாதிருக்க
இயல்பு மாற்றி
சுயம் தொலைத்தாய் ...
உன்
உலகை என்னைச்சுற்றி
அமைத்துக்கொண்டாய் ...

வறுமையிலும்
ஈர விறகோடு விறகாய்
பொசுங்கி
என் வயிற்றுப்பசி தீர்க்க
உன்
வயிற்றளவை குறுக்கினாய் ...

நான் மிடுக்காய்
உடை உடுத்தி பள்ளி செல்ல
நீயோ
ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய் ....

கருவறையில்
மட்டுமல்ல
நான்
வளரும் போதும்
உன் இரத்தம் குடித்துதான்
வளர்ந்தேன் ...

மனிதனாய் என்னை
வெளியுலகிற்கு
காட்டியவளே ...

இன்று
இரக்கமற்ற முதுமை
உன் உடலை செல்லாய்
அரித்து செல்லாக்காசாய்
படுக்கையில் குழந்தையைப்போல்
கிடத்தியிருக்கிறது ....

எனக்காய் முழுமையாய்
சுயம் மறந்து,
தொலைந்து, கரைந்து
போனவளே ....

உனக்கு நான்
தாயாய் ...
எனக்கு நீ
குழந்தையாய்
ஆகும்
பாக்கியத்தை தவிர
வேறு என்ன
பிரயாசித்தம்
செய்து விட முடியும் ....?

                                         - எஸ்.ஏ.சரவணக்குமார்

Posted on: Sunday, July 21, 2013

தினமலர் வாரமலரில் ஒரு கைப்பிடி வாழ்க்கைநன்றி     தினமலர்  வாரமலர்   21-07-2013

 

Posted on: Thursday, June 27, 2013

குமரி மாவட்ட கருங்கல் வட்டார தொழில் வர்த்தக மேம்பாட்டு சங்க சிறப்பு (2013) மலரில் எனது ஒரு முறையே பூக்கும் பூவிது ... கவிதை


ஒரு முறையே பூக்கும் பூவிது ... 


 

Posted on: Sunday, June 23, 2013

தினமலர் வாரமலரில் வாழ்க்கை நாடகம் ..!

நன்றி     தினமலர்  வாரமலர்  -23-06-2013
 

Posted on: Tuesday, May 28, 2013

தோள்  தருவாயா .....?

தோள்  தருவாயா .....?


நானறியாமல்
என்னுள் முழுமையும்
நிறைந்தவளே ...

நீ  நிறைந்திருக்கும்
எனது கணங்கள்
என்னை எனக்கு
அடையாளப் படுத்துகின்றன ...!

பூ விழுந்தால்
நீ ஜெயித்தாய்
தலை விழுந்தால்
நான் தோற்றேன் ...
நீ விளையாடும்  புதிரான
காதல் விளையாட்டு ....

உன்னைப் பார்த்த
கண்களால் எதைப்பார்த்தாலும்
அழகாய் தெரிகின்றன ...
நான் உள்பட ....!

மரணத்திற்கும்
வாழும் ஆசைக்கும்
இடைப்பட்ட மரணசுகம்
உனக்காக காத்திருக்கும்
நொடிகள் ....!

ஊர் கூடி தேர் இழுக்க
நாம் கண்களால்
ஒருவரை ஒருவர்
இழுத்துக்கொண்டோம்  ....

புளி மாங்காய்
தேமாங்காய் ...
ஆசிரியர் பாடம் நடத்தும் போது,
எனக்கு  நீ கடித்து கொடுத்த
மாங்காய்  தான் இலக்கணமாய்
தெரிந்தது .....

இவை எல்லாம்
நேற்று வரை நடந்தவைகள் ....

காதல்
கற்பனையானது ...
அழகானது ....
காதல் மட்டுமாயின்,
காதல் சுகம் ....!

அடுத்த பரிணாமம்
நிஜம் ....!

சுற்றம்
பொருளாதாரம்,
வகுப்பு வாதம் பேசும் ...

சரி .. நமக்கு நாமே
துணையென உறவு பகைத்து
வாழ்கை நடத்தகூட
பொருளாதாரம் அதிமுக்கியம் ....!

அதனால் ,
காதலை நம்முள்
பகிர்ந்துக் கொள்ளும் முன்
சுயகாலில் நின்று ...

நம் வெற்றியை உன்
கன்னங்களுடன்  கொண்டாட
விரும்புகிறேன் ...

அதுவரை,
என் உயிர் குடிக்கும்
மாயக்காரியே ....

நான் துவண்டு விழும்
பொழுது எல்லாம்,
உன் பார்வையால்
எனக்கு தோள்  தருவாயா ....?

Posted on: Tuesday, April 9, 2013

கடைசி பிச்சை …(ஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம் - சிறப்பு கவிதை )ஊனப்பட்டுப்போன

மனம் படைத்தோர்
வாழும் உலகில் …

சிற்பியின் கவனச்சிதறல்களால்
சிதறிப்போன
கண்ணாடி சிதறல்கள்
நாங்கள்.....

ஊனமனது வார்த்தை
பிரதிபலிப்பால்
சுருங்கி துடிப்பது
"எங்கள் இதயம் மட்டுமல்ல
எங்களின் மனமும் தான் ....!

ஆண்பால் ...
பெண்பால் ...
என்று பிரிக்க தெரிந்த
வக்கிர மனதுக்கு
மூன்றாம் பாலினத்தை
உச்சரிக்க தைரியமில்லை ....!

உடல் ஊனம் என்றால் கூட
செயற்கை உறுப்புகள் உண்டு ...
மன ஊனத்திற்கு ....?

மாற்று பாலினம் என்று
ஒதுக்கியதால்,
பசியரக்கன் முன்
பிச்சைக்காரர்களாய் ...

பால் மாறிப்போனதால்
பாலியல் வெறியர்களில்
பார்வையில் பாலியல்
தொழிலாளியாய் ....

இறைவனை நோவலாம்
என்றால்,
அவனும் கூத்தாண்டவர் கோவிலில்
எங்களுக்கு போட்டியாய் ....

இனி பொறுப்பதில்லை ...
குட்ட, குட்ட குனிந்து
கூன் போட்ட புற முதுகும்
எங்களுக்கு தேவையில்லை ....

மனிதர்கள் வாழ வேண்டிய
பூமியில்
மனிதத்துவம் மறந்து
வாழ்வோரே ...!

உங்களிடம் எங்களின்
கடைசி பிச்சை ....

எங்களை நீங்கள்
மூன்றாவது பாலினமாய்
ஏற்றுக்கொள்ள வேண்டாம் ....

அது எங்கள் உரிமை ...!

தரங்கெட்ட வார்த்தையால்
மனதை காயப்படுத்துவதை
தவிருங்கள் ...!

தெருவில்,
தெரு நாயை கல்லெடுத்து
அடித்தால் கூட,
கேட்க ப்ளூ கிராஷ்
என்று ஓன்று உண்டு ....

எங்களுக்கு ....?
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதர்களுடன் மனிதர்களாய்
வாழ ஆசைப்படுகிறோம் ....!

கடைசி பிச்சையாய் ....

சக மனிதா ….!
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதனாய் வாழ்வாயா ….?Posted on: Saturday, January 19, 2013

அலெக்ஸ் பாண்டியன் - விமர்சனம்
இப்பலா சுவிஸ் போங்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண கெடுபிடி அதிகமா  இருக்கேன்னு பீல் பண்றவங்க, ஏமாத்துன பணமோ இல்ல லஞ்ச பணமோ உங்ககிட்ட அதிகமா இருந்தா நீங்க அலெக்ஸ் பாண்டியன் பட பேனரை எந்த தியேட்டர்ல பார்த்தாலும் தாராலமா டிக்கட் எடுத்துட்டு படம் பார்க்க போகலாம்.

கதைன்னு பார்க்கபோனா, புளிச்சு போன மாவுல மாசால் தோசையை சுட்டு, அதை மறைக்க மேல முந்திரியையும் பாதாமையும் தூவி பரிமாறிய கதை.

தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ் நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கிடைக்காததால், அவர் மகளை கடத்தி, மிரட்டி அனுமதி கேட்கிறது வில்லன் கூட்டம்.  அவர்கள் முதலமைச்சர் மகளை கடத்த கூலிக்கு அமர்த்தியவன் தான் கதாநாயகன், உண்மை தெரிந்து வழக்கம் போல் கதாநாயகியை காப்பாற்றி முதலமைச்சரிடம் ஒப்படைக்கிறான், கதாநாயகன்.

கதாநாயகனும் கதாநாயகியும் இருந்தா லவ்வியே ஆவணும் என்கிற தமிழ்நாட்டு இரசிகனின் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாமல், லவ்வூவூவூவூவூ ..

கை நீட்டி காசு வாங்கிட்டோமேன்ற குற்ற உணர்ச்சில கார்த்திக்கும் பாவம் ரயில் மேலலா பறந்து, பறந்து சண்டை போட்டு இருக்காரு.  அனுஷ்காவும் காசு வாங்கிய பாவத்திற்கு தொடைய காட்டியிருக்காங்க.

படத்துல உருப்படியான விசயமே சந்தானம் காமடித்தான்.  தெரியாம காசு கொடுத்து டிக்கட் எடுத்தவங்க, காமடிக்காக காசு கோடுத்ததா நினைத்துக் கொள்ளலாம். அதையும் பிட்டு, பிட்டா ஆதித்தியாவுல போட்டுடுவாங்க.

மொத்தத்துல வர்ர தமிழ் புத்தாண்டிலியோ இல்ல அதைவிட சீக்கிரம் வர்ர ஏதாவது விடுமுறைக்கோ, சன் டிவில "உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக … " என்கிற விளம்பரத்தை பார்க்கலாம்.

Posted on: Wednesday, January 2, 2013

காமத்தில் தாய்மை தேடல் ....தேடல் ......!


ஒரு போதும்
காமம் நிறைவடைவதில்லை,
தாய்மை தேடலில் …!

காமம் ...
அது,
ஆழ் மனதின்
தாய்மை தேடலில் தோற்ற
கண்ணீர் துளிகள் ...!

பெரிய குழந்தைகளின்
தாய்மை தேடல்
எப்பொழுதுமே
காமத்தில் இருந்துத்தான்
தொடங்குகிறது ....
சில சமயம் காமம்
என தவறாக அர்த்தம்
கொள்ளப்படுகிறது ....!

பெண்களின் மார்பின் மீது
ஆண்களுக்கு  ஈர்ப்பு உண்டு ...
அது காமத்தை தாண்டி
தன் தாயின் பால் சுரந்த
வெது வெதுப்பின்
தேடலின் எச்சம் ...!

காமம் எப்போதும்
எல்லோருக்கும்
காமமாகவே
இருந்துவிட முடிவதில்லை ...

சில நேரங்களில்
பல நேரம்
மனதிற்கும் காமம் உண்டு,
தாய்மை தேடலில் ...!
 
Tweet