Pages

Posted on: Tuesday, April 9, 2013

கடைசி பிச்சை …(ஏப்ரல் - 15, திருநங்கைகள் தினம் - சிறப்பு கவிதை )











ஊனப்பட்டுப்போன

மனம் படைத்தோர்
வாழும் உலகில் …

சிற்பியின் கவனச்சிதறல்களால்
சிதறிப்போன
கண்ணாடி சிதறல்கள்
நாங்கள்.....

ஊனமனது வார்த்தை
பிரதிபலிப்பால்
சுருங்கி துடிப்பது
"எங்கள் இதயம் மட்டுமல்ல
எங்களின் மனமும் தான் ....!

ஆண்பால் ...
பெண்பால் ...
என்று பிரிக்க தெரிந்த
வக்கிர மனதுக்கு
மூன்றாம் பாலினத்தை
உச்சரிக்க தைரியமில்லை ....!

உடல் ஊனம் என்றால் கூட
செயற்கை உறுப்புகள் உண்டு ...
மன ஊனத்திற்கு ....?

மாற்று பாலினம் என்று
ஒதுக்கியதால்,
பசியரக்கன் முன்
பிச்சைக்காரர்களாய் ...

பால் மாறிப்போனதால்
பாலியல் வெறியர்களில்
பார்வையில் பாலியல்
தொழிலாளியாய் ....

இறைவனை நோவலாம்
என்றால்,
அவனும் கூத்தாண்டவர் கோவிலில்
எங்களுக்கு போட்டியாய் ....

இனி பொறுப்பதில்லை ...
குட்ட, குட்ட குனிந்து
கூன் போட்ட புற முதுகும்
எங்களுக்கு தேவையில்லை ....

மனிதர்கள் வாழ வேண்டிய
பூமியில்
மனிதத்துவம் மறந்து
வாழ்வோரே ...!

உங்களிடம் எங்களின்
கடைசி பிச்சை ....

எங்களை நீங்கள்
மூன்றாவது பாலினமாய்
ஏற்றுக்கொள்ள வேண்டாம் ....

அது எங்கள் உரிமை ...!

தரங்கெட்ட வார்த்தையால்
மனதை காயப்படுத்துவதை
தவிருங்கள் ...!

தெருவில்,
தெரு நாயை கல்லெடுத்து
அடித்தால் கூட,
கேட்க ப்ளூ கிராஷ்
என்று ஓன்று உண்டு ....

எங்களுக்கு ....?
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதர்களுடன் மனிதர்களாய்
வாழ ஆசைப்படுகிறோம் ....!

கடைசி பிச்சையாய் ....

சக மனிதா ….!
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதனாய் வாழ்வாயா ….?



1 comments:

Unknown said...


சக மனிதா ….!
மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதனாய் வாழ்வாயா ….?
//
சாட்டை அடி வரிகள்
நாடி கவிதைகள்

Post a Comment

 
Tweet