Pages

Posted on: Friday, November 23, 2012

என் முதல் காதலியை இழந்து விட்டேன் …..வயசாயிட்டாவே …. இனி புரோயோஜனம் இல்லன்னு தெரிஞ்சிட்டா … கூடவே, மேனா மினுக்கியா ஒருத்தி வந்துட்டா … அது வரை கை கோர்த்து கூட வந்தவளை அப்படியே விட்டுட்டு போறதுதானே மனித கூட்டம்..? நான் மட்டும் விதிவிலக்கா என்ன…?

என் காதலியை பிரியும்படியா ஆயிடிச்சு.  அதுவும் பதினோரு வருசமா … என் கூட இளைச்சிக்கிட்டு வந்தவள … என் மனைவி கூட எனக்காக இப்படிலா கஸ்டப்பட்டதில்ல .... 

நான் மழைல நனையும்போது நனைந்து, வேகாத வேயில்ல எனக்காக வாசல்லயே காத்து கிடந்து, என்னை பார்த்த மாத்திரத்துல அதுவரை பட்ட கஸ்டத்தை எல்லாம் மறந்துட்டு காதலோட ஒரு 'லுக்' விடுவா பாருங்க … அது வரை ஆபிஸ்ல இருந்த டென்சன்லா ஒடிபோய் அப்படியே ஜில்லுன்னு ஆயிடும்.  அப்படியே பாசத்தோட அவள வருடிக்கிட்டே, ஆபிஸ் விசயத்தலா அவாகிட்ட சேர் பண்ணிக்கிட்டு வீடு வந்து சேர்ரது …நாளைக்கான புதுவேகத்தை கொடுக்கும்! 

காதலை வேற யாரும் எனக்கு இப்படி காதலோட. தாய் பாசத்தோட சோல்லி கொடுத்தது இல்லை….

மனசே கேக்கல. அவளை அப்படியே அங்க விட்டுட்டு, புது மேனா மினுக்கியோட வெளிய வரும் போது…. தானே தன் கனவனுக்கு ரெண்டாவது திருமணம் செஞ்சிவச்சிட்டு அவங்க ஜோடியா வெளிய போகும் போது வழி அனுப்பிவைக்கிற மனைவி மாதிரி … என்னை பார்த்து 'வுட்டுட்டு போறீயா?' ன்ற மாதிரி ஒரு லுக் விட்டா பாருங்க பச்! என் உயிர் என்கிட்டயே இல்ல …

சந்தோசமோ, கோபமோ முதல்ல அவக்கிட்டத்தான் காட்டியிருக்க … அதுக்காக அவா ஒருவாட்டி கூட மொகத்த காட்டுனதுயில்ல … 'கௌம்பு'ன்னா போதும் சந்தோசமா கௌம்பிடுவா …

என் மகன் எனக்குமேல 'பீல்' பண்ணி அவளை கெட்டிபிடிச்சு கிஸ் பண்ணிட்டு, மனசே இல்லாம வந்தான்.

"இதுக்கு மேல இதை ரிப்பேர் பார்க்க முடியாது சார்"ன்னு மெக்கானிக் சண்டைக்கு வந்த பிறகு, வேற வழியே இல்லாமத்தான் என் பழைய டி,வி,எஸ் விக்டரை கொடுத்துட்டு புது டூ வீலர் வாங்கும்படியா ஆயிடிச்சு. 

புது காதலிபுது நட்பு!! ஆனாலும் முதல் காதலை மறக்க முடியாமல்....

Posted on: Tuesday, November 13, 2012

கந்தக தீபாவளி ...!
பட்டாசு வெடித்து

தீபாவளி கொண்டாடுங்கள்...!


பட்டாசு சத்தம்

கந்தக பிஞ்சுக்களின்

கால் வயிற்று கஞ்சி...!


கந்தக கிடங்கில்

கருகிய மொட்டுக்களின்

பச்சை இரத்த வாசம்...


மகரந்த கனவுடன்

மொட்டோடு கருகிய

எதிர்கால....

மருத்துவர்...!

பொறியாளர்...!

விஞ்ஞானி ....!


கந்தக குளத்தில்

தன் சந்ததியாவது

மலரும் என்ற நம்பிக்கையில்,

பல செடிகள்

தலைமுறை,

தலைமுறையாய்.....

மலடாய்...!
 
விடிந்தால்

தீபாவளி....

எங்களுக்கும் தான்....!

கந்தகம் வெடித்து

சிதறும் சத்தத்தில்

எங்கள்

வயிறு சிரிக்கும்...!


கங்கா ஸ்நானம்

செய்யாவிட்டாலும்

கங்கைக்கு ஒன்றும்

பாதகமில்லை....


பட்டாசு சத்தம்

உங்களுக்கு வேடிக்கை...!

எங்களுக்கு

கால் வயிற்று கஞ்சி...!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

Posted on: Monday, November 12, 2012

இது மக்களுக்கான அரசு என நிருபித்த அதிகாரிகளுக்கு, இணைய எழுத்தாளர்களுக்கு நன்றி! நன்றி!!!!21/10/2012 அன்று எனது வலைப்பூ,முகநூல் மற்றும் டிவிட்டரில்( http://nellaikavisasaravanakumar.blogspot.in/2012/10/blog-post_21.html )  மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ????? என்ற தலைப்பில் சென்னை அருகே பட்டாபிராமில் பொதுமக்களுக்கு பயன்படும் ரேசன் கடை போதிய பாதுகாப்பற்ற முறையில் புதர்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதை வேதனையோடு வெளியிட்டிருந்தேன்,
 அதை கண்றுற்ற பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக அக்கடையை சி.டி.எச் சாலையில் மாற்றி அது உடனடியாக செயல்படவும் உத்தரவிட்டிருந்தனர்,
இது இணைய எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெற்றி,
எனது இடுக்கையை தங்களது வலைப்பூ,முகநூல் மற்றும் டிவிட்டரில்  பகிர்ந்து இவ்வளவு பெரிய சாதனைக்கு துணையிருந்த அனைத்து இணைய ஏழுத்தாளர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!!!


 
Tweet