Pages

Posted on: Thursday, July 2, 2009

விண்ணப்பம் ...! (காதலிக்காத பெண்களுக்கு மட்டும்..)






விண்ணப்பம் ...!





என் அறையெங்கும்
பொக்கிசமாய் உன் தடயங்கள் ...

உன் தாவணி
கிழித்த வேலிகாத்தான்
முள் முதல்,
உன் பாதம் வருடிய
கருங்கல் வரை ....

என்னை உன்
பொக்கிசமாய்
பரணிலாவது
தூக்கிபோடேன் .....

********************

ஜோடி பொருத்தம் ...!


கோவில் வாசலில்
உன் காலணி அருகே
என் காலணியை
கழற்றிவிட்டு,
பிரிய மனமின்றி
நின்று இரசிக்கிறேன் .....
ஜோடி பொருத்தத்தை ...!
**********************

உன் வாசம்...!


என் சட்டை பைக்குள்
உன் வாசம் ...!
நேற்று நீ
சூடி வீசி எறிந்த
ரோஜாவுடன் உன்
தலை முடிகள்...!

*************************

காதல் ....!


விழி மீன்
தூண்டியலிட
இதய புழு
வழியப்போய்
சிக்கிக் கொள்கிறது ...!

3 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

// (காதலிக்காத பெண்களுக்கு மட்டும்..//

அப்படி யாராவது இருக்காங்களா?

செந்தழல் ரவி said...

கலக்கு

" உழவன் " " Uzhavan " said...

//உன் தாவணி
கிழித்த வேலிகாத்தான்
முள் முதல்,//

அருமையான வரிகள்.

Post a Comment

 
Tweet