அறியாமை ...!
புத்தகத்திற்குள்
மயிலிறகை
வைத்துக்கொண்டு
குட்டி போடும்
என காத்துகிடந்த
அறியாமை
இன்றும்
தொடர்ந்துக்கொண்டுத்தான்
இருக்கிறது ...
கோப்புகளுக்குள்
பட்டங்களை
வைத்துக்கொண்டு ...!
உழைப்(பு) பூ
அழகு
உருவத்திலில்லை
பார்வையில்...!
சுவை
உணவிலில்லை
பசியில்...!
துன்பம்
மனதிலில்லை
பார்வையில்..!
வெற்றி
அதிருஷ்டத்திலில்லை
உழைப்பில் ..!
11 comments:
//புத்தகத்திற்குள்
மயிலிறகை
வைத்துக்கொண்டு
குட்டி போடும்
என காத்துகிடந்த
அறியாமை
இன்றும்
தொடர்ந்துக்கொண்டுத்தான்
இருக்கிறது ...
கோப்புகளுக்குள்
பட்டங்களை
வைத்துக்கொண்டு ...!//
அர்த்தமுள்ள அருமையான வரிகள்...
/இன்றும்
தொடர்ந்துக்கொண்டுத்தான்
இருக்கிறது ...
கோப்புகளுக்குள்
பட்டங்களை
வைத்துக்கொண்டு ...!/
அருமை.
/சுவை
உணவிலில்லை
பசியில்...!/
இது நல்லா இருக்கு. ஆனா பசி ருசியறியாதுன்னு சொல்லுவாங்கள்ள. பாருங்க. என் கருத்து அவ்வளவுதான்.
நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.
அறியாமை,உழைப்பு குறித்த கருத்துக்கள் அருமை.
தொடரட்டும் படைப்புகள்.
அருமை
//புத்தகத்திற்குள்
மயிலிறகை
வைத்துக்கொண்டு
குட்டி போடும்
என காத்துகிடந்த
அறியாமை
இன்றும்
தொடர்ந்துக்கொண்டுத்தான்
இருக்கிறது ...
கோப்புகளுக்குள்
பட்டங்களை
வைத்துக்கொண்டு ...!//
அருமை
அருமை
அருமை.....
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் சரவணக்குமார்
//வெற்றி
அதிருஷ்டத்திலில்லை
உழைப்பில் ..! //
எல்லா வர்களும் நல்லாயிருக்கு சரவணன் கடைசி வரி நச்
Mudhal kavidhai miga pidithirudhandhadhu nellai enge thala?
nan kadayam near tenkasi
பிறந்தது நெல்லை! வளர்ந்தது சென்னை! குளித்தது தாமிரபரணி! குடித்தது செம்பரம்பாக்கம்!! - அது ஒன்னு இல்ல தல, ஒரு புளோல வந்துடிச்சி!! நெல்லைல நம்ப மீசைக்காரருக்கு பக்கத்தூரு!!!!!
அருமை பாராட்டுக்கள்.
அறியாமையை வெகுவாக ரசித்தேன்.
Post a Comment