Pages

Posted on: Tuesday, September 1, 2009

உன்னை நேசிக்க வைத்து ...!





காதலோடு...!






புதுகவிதையாய் நீ ...
மரபு கவிதையாய் நான்...
நமக்குள் தொடர்ந்து
கொண்டுத்தான்
இருக்கிறது...
முடிவுறா
விமர்சனங்கள்
காதலோடு...!




உன்னை நேசிக்க வைத்து ...!



உன் பார்வை
என்னை
தீண்டும்போதெல்லாம்
அகலிகையாய்
ஆகிடும் நான் ...

என்னை நீ
தவிர்த்திட முயலும்
கணங்களில்
முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் ...

மறுபடியும்,
மறுபடியும்
துளிர்த்தெழுந்து
உன்னை நேசிக்க...!





மனசு ..!






உன் இரட்டை
ஜடையில்
ஒற்றை ரோஜா...
ஆடுகிறது மனசு..!

6 comments:

சீமான்கனி said...

//என்னை நீ
தவிர்த்திட முயலும்
கணங்களில்
முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் ...

உன் இரட்டை
ஜடையில்
ஒற்றை ரோஜா...
ஆடுகிறது மனசு..!//

ரசித்து ருசித்து படித்தேன்....அருமையோ அருமை....

ப்ரியமுடன் வசந்த் said...

//புதுகவிதையாய் நீ ...
மரபு கவிதையாய் நான்...
நமக்குள் தொடர்ந்து
கொண்டுத்தான்
இருக்கிறது...
முடிவுறா
விமர்சனங்கள்
காதலோடு...! //

கிளாஸ் ........

கலகலப்ரியா said...

//முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் ...//

உவமானம் நல்லா இருக்குங்கோ... எப்டி இப்டி ஐடியா எல்லாம்.. (வீட்ல முருங்க கீர அதிகம் சாப்டுறாங்களோ)

//புதுகவிதையாய் நீ ...
மரபு கவிதையாய் நான்...//

கவிதை நல்லா இருக்குங்கன்னு சொல்லாம விட்டதுக்கு இதான் காரணம்... அப்புறம் "நானா.. அவுங்களா"ன்னு நீங்க கேட்டா.. நான் என்னத்த சொல்றது சொல்லுங்க.. =)

vasu balaji said...

என்னை நீ
தவிர்த்திட முயலும்
கணங்களில்
முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் .

நல்லா இருக்கு.

அருமையா எழுதுறீங்க. பாராட்டுக்கள்

துபாய் ராஜா said...

//புதுகவிதையாய் நீ ...
மரபு கவிதையாய் நான்...
நமக்குள் தொடர்ந்து
கொண்டுத்தான்
இருக்கிறது...
முடிவுறா
விமர்சனங்கள்
காதலோடு...!//

அருமை.

//உன் பார்வை
என்னை
தீண்டும்போதெல்லாம்
அகலிகையாய்
ஆகிடும் நான் ...

என்னை நீ
தவிர்த்திட முயலும்
கணங்களில்
முருங்கையாய்
முறிக்கப்படுகிறேன் ...

மறுபடியும்,
மறுபடியும்
துளிர்த்தெழுந்து
உன்னை நேசிக்க...!//

அட்டகாசம்.

//உன் இரட்டை
ஜடையில்
ஒற்றை ரோஜா...
ஆடுகிறது மனசு..! //

தூள்.

வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

முருங்கை உதாரணம் சூப்பர்

Post a Comment

 
Tweet