நடந்து போன பாதையில்....!
ஒன்பது கிரகங்கள்,
சில கட்டங்கள்,
சிலரது பிழைப்புகள்..!
மனித கழிவை
மனிதனே அள்ள
மாந்தர்களின் அரசியல் ...!
காவித்துணிகள்
அதில் சில
காக்கி உடைகள் ...
காக்கி உடைகள்
அதில் சில
கையேந்தி பிச்சைக்காரர்கள் ...!
சரிநிகர் உயிர்கள்
பாலினத்தால்
பலகீனப்படுத்தப்பட்டு
தன் உரிமைக்காக
33 சதவீதமாவது தா ..
என கெஞ்ச வைக்கும்
முட சமூகம்...!
சமூக விலங்குகள்
நடந்து போன
பாதையெங்கும்
முகங்கள் சிதறிகிடக்கிறது ...
அத்தனையும் போலியாய் ....!
உண்மை முகம் தேடி
தோற்று
என் அறையுள் நுழைந்தேன் ...
அங்கே சில முகங்கள்
சூடி எறியப்பட்டு ...!
6 comments:
பாஸ் கவிதை சூப்பர்
//மனித கழிவை
மனிதனே அள்ள
மாந்தர்களின் அரசியல் ...!//
ஐ லைக் திஸ்
இன்னா தல சென்னைல இருந்துட்டு நியுயார்க்கோட வெதர் ரிப்போர்ட்டை போட்டுருக்கீங்க...
உங்களுக்கும் அமெரிக்க மோகமா???
//சமூக விலங்குகள்
நடந்து போன
பாதையெங்கும்
முகங்கள் சிதறிகிடக்கிறது ...
அத்தனையும் போலியாய் ....!//
மிகப் பிடித்திருந்தது நண்பரே.
மிக நன்றாயிருக்கிறது. பாராட்டுகள்.
//காவித்துணிகள்
அதில் சில
காக்கி உடைகள் ...
காக்கி உடைகள்
அதில் சில
கையேந்தி பிச்சைக்காரர்கள் ...!//
சமூக அவலங்களுக்கு சாட்டை அடிகொடுதுள்ளிர்கள்...அருமை...வாழ்த்துகள்...
ok...arumaiyaa irukku boss
மிக நன்றாக இருக்கிறது
Post a Comment