கழற்றி எறிந்த முகங்கள்....!
பகலின் எச்சங்கள்
இரவை தின்றுக்கொண்டிருக்கின்றன.. !
வெற்றி களிப்புகள்...
குற்ற உணர்ச்சிகள் ...
காரி உமிழப்பட்ட
எச்சில் துளிகள் ஈரமாய் ...
எண் ஜானின்
ஒரு ஜான் எஜமான்
கட்டளையிடுவதால் ...
தன்மானத்தில்
பட்ட எச்சில் துளிகளை,
வழித்து எறிந்துவிட்டு
அடுத்த பொழுதை
எதிர்கொள்ள
புதிதாய்...
கூச்சல்கள்...
கதறல்கள்...
கெஞ்சல்கள்...
அதிகார சத்தங்களின் முன்
கறைந்து போகிறது...!
எளியவனும்
வலியவனாவான்
தன்னைவிட
எளியவன் சிக்க...!
உடல் வளர்க்க
சூடிய பொய் முகங்கள்
இரவில் மெய் முகத்தை
ஏளனம் பேசும்...!
இயலாமை
கண்ணீர் ஓலங்களை
புணர்ந்து பொய் முகங்களை
அறையெங்கும் பிணங்களாய்
கழற்றி போட்டிருக்கும் ...!
கண்ணீர் துளிகள் மட்டுமில்லை ...
வேதாந்தமும் சுகமாய்
உணர்த்தப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு ....?
[ உரையாடல் போட்டிக்கவிதை]
10 comments:
எதார்த்தை உணர்த்தும் கவி வரிகள் அருமை..வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... சரவணா
அழகாக இருக்கிறது..வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஊருக்குள் உலவும் உண்மை முகத்தை உரித்துக் காட்டுகின்றன உங்கள் கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி seemangani
நன்றி கமலேஷ்
நன்றி குடந்தை அன்புமணி - திரும்ப உங்கள் வருகையால் மகிழ்ச்சி! நிறைய எழுதுங்கள்! காத்திருக்கிறோம்
gd one bro,,,,
//எண் ஜானின்
ஒரு ஜான் எஜமான்
கட்டளையிடுவதால் ...//
நல்ல கற்பனை.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்
மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்
சரவணன் வெற்றிக்கு வாழ்த்துகள்.
அருமையான கருப்பொருள் கவிதை.
எளியவனும்
வலியவனாவான்
தன்னைவிட
எளியவன் சிக்க...!//
ithai than periyavarga sonnargal, eliyavanai valiyavan adithaal valiyavanai vallan adippan..
அருமையான கவிதை அருமை.
//தன்மானத்தில்
பட்ட எச்சில் துளிகளை,
வழித்து எறிந்துவிட்டு
அடுத்த பொழுதை
எதிர்கொள்ள
புதிதாய்...//
//கண்ணீர் துளிகள் மட்டுமில்லை ...
வேதாந்தமும் சுகமாய்
உணர்த்தப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு ....?//
அட்டகாசமான வரிகள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Post a Comment