Posted on: Wednesday, March 10, 2010
ஒரு வார்த்தையில்.... தினமலர் வாரமலர்
ஒரு வார்த்தையில்....
* உதட்டு சூட்டில்
அருகாமையை உணரும்
சிசுவாய்
காத்துக் கிடக்கிறேன்
உன் கொலுசொலிக்காக...
* ஆர்கானிக் விஷமாய்
உன் பார்வை என்னை
சிறுக சிறுக
அரித்துக்கொண்டிருக்கிறது!
* பசித்திடும் போது கூட,
நீ என்ன சாப்பிட்டுக் கொண்டிருப்பாய்
என்ற எண்ணமே
மேலோங்குகிறது!
* உன் வீட்டு
திரைச் சீலை
காற்றுக்கு விலகும்
போதெல்லாம்
தாயை தேடும் மழலையாய்
ஆடும் என் மனம்...
ஏமாற்றத்தில்
வெளிவந்து விழுந்த
வழித்த எச்சில் இலையை
கண்ட தெரு நாயாய்
சுருங்கி போகிறது!
* உன்னை ஸ்பரிசித்த
சுவாச காற்றை
ஸ்பரிசிக்க...
நீ நடந்து போன
பாதையில் தேடி அலைகிறேன்!
* பத்து முறை எழுதியும்
பத்தாவது கூட தேறாத
நான்...
உன் பார்வை என் இதயத்தில்
உண்டாக்கிய பூகம்பத்தால்
தலையில் இரண்டு
கொம்பு முளைத்து
சுனாமியாய் சுற்றித் திரிகிறேன்!
* இதெல்லாம்,
முக்குத் தெரு,
குட்டிச் சுவற்றில்
கும்பலாய் அமர்ந்திருந்தவர்களுக்கு
மத்தியில்...
என்னை, உன் பார்வை
குறிப்பாய்
தீண்டிப்போன கணத்தில்
இருந்தது தான்!
* என்னவளே...
என்னுள் நிகழ்ந்த
மாற்றங்கள்
உன்னுள்ளும் நிகழ்ந்தனவா?
* ஒரு வார்த்தையில்
உள்ளத்தை சொல்லிவிடு...
* இல்லை என்ற
வார்த்தை மட்டும்
நமக்கு வேண்டாமே!
நன்றி: தினமலர் வாரமலர் - 28/02/2010
Labels:
கவிதை,
சரவணக்குமார்,
தினமலர்,
வாரமலர்
4 comments:
நெஞ்சை தொட்டு செல்கின்றன
தொடர்ந்தும் எழுதுங்க்கள்
தொடர்ந்தும் எழுதுங்க்கள்
ஏற்கனவே உங்கள் தளத்தில் படித்த கவிதைபோல் தெரிகிறது.
வாழ்த்துகள் :-)
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
Post a Comment