சீதைகள் தயார்...!
கத்து வட்டிக்காரனிடம்
கடன் பட்டவனைப்போல்
நிலை தடுமாறி
துடிக்கிறது இதயம்
நீ நடந்து சென்ற பாதையில்....
உன் பார்வை
தீண்டும் கணங்களில்
மின்சார தகன மேடையில்
வைக்க பட்டவனைப்போல்
செயலற்று கிடக்கிறேன்...
உன் சங்கு கழுத்தை
திருப்பி
புன்னகை பூவை
மலர விட்டு போகும்
உன் வாசம்
என்னை கட்டி இழுத்து
போகும்
உன் பின்னே ...
இதெல்லாம்
நீ விடலையாய் இரவல் வாங்கி
மயக்க நினைத்த
கவிதை வரிகள் தான்...
இதெல்லாம் வேண்டாம்
இராவணனே...!
வரதட்சணை கம்பிகளை
உடைத்து இந்த
முதிர் கன்னியை
காலமெல்லாம் காதலில்
மூழ்கடிப்பேன்
என்று ஒத்தை வரி
சொல் போதும்...
உன்னுடன் வனவாசம்
என்றாலும் உவப்புடன்
ஓடி வர இங்கே
சீதைகள் தயார்...!
3 comments:
அருமை நிறைய எழுதுங்க சரவணக்குமார்
ஆஹா!
//உன் பார்வை
தீண்டும் கணங்களில்
மின்சார தகன மேடையில்
வைக்க பட்டவனைப்போல்
செயலற்று கிடக்கிறேன்...
//
//வரதட்சணை கம்பிகளை
உடைத்து இந்த
முதிர் கன்னியை
காலமெல்லாம் காதலில்
மூழ்கடிப்பேன்
என்று ஒத்தை வரி
சொல் போதும்...//
அருமை சரவணா அற்புதமா வந்து இருக்கு வாழ்த்துகள்..
Post a Comment