Pages

Posted on: Tuesday, October 5, 2010

தினமலர் வாரமலரும் எனது "அந்த கண நேரமும்" ...!





அந்த கண நேரம் !







தொழுநோயாளியின்
நமச்சலைப் போல்
மறுபடியும்,
மறுபடியும்...
உன் நினைவுகள்...

ஊர் உறங்கிய பிறகும்,
நீ உறங்கியிருப்பாயா
என்ற நினைப்பில் நான்!

நிலா, நிலா ஓடி வா
என்று என்
தாய் எனக்கு
அறிமுகப்படுத்திய
நிலவிற்கும்,
நீ எனக்கு அறிமுகமான பிறகு,
வரும் நிலவிற்கும்
நிறைய வேற்றுமைகளை
உணர்கிறேன்!

காரிருளை
காணும் போதெல்லாம்
விளக்கேற்ற வேண்டும்
என்ற எண்ணம் மடிந்து...
உன் செந்நிற முதுகில்
கார் கூந்தல் புரளும்
இடைவெளியில்
கடுகளவில் கிடக்கும்
அந்த
அழகிய மச்சம்...
மறக்க முயன்றாலும்
தவிர்க்க முடியவில்லை!

மவுனமாய்
பேசும் உன் விழிகள்
என் மனதை
புணர்ந்து போன
அந்த கண நேரம்...

காத்துக் கிடக்கிறேன்
போதை வஸ்து
அடிமையைப்போல்...

மற்றொரு
பார்வைக்காக!

3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போட்டுத்தாக்குங்க,கலக்கல் கவிதை வாத்தியாரே

சி.பி.செந்தில்குமார் said...

எனக்குப்பிடித்த வரிகள்,>>>>

காத்துக் கிடக்கிறேன்
போதை வஸ்து
அடிமையைப்போல்...

மற்றொரு
பார்வைக்காக! >>>

அருமையான காதல் உணர்வு வெளிப்பாடு

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி சி.பி.செந்தில்குமார்

Post a Comment

 
Tweet