மரண சுகமடி நீ எனக்கு ....!
| மாம்பழத்து வண்டைப்போல் |
| தடம் காட்டாமல் |
| உள் புகுந்தவளே ....! |
| வண்டைப்போல் உயிர் |
| குடிக்கிறாய் ... |
| உயிர் குடிக்கும் அந்த |
| மரண சுகம் வேண்டி |
| போதை வஸ்த்து அடிமையைப்போல் |
| உன்னை தேடுகிறேன் ... |
| எனது ஒவ்வொரு |
| கணமும் உன் நினைவுகளால் |
| நிறைந்த்திருக்கிறது ... |
| நீ நிறைந்திருக்கும் |
| எனது கணங்கள் |
| என்னை வாழ தூண்டுகின்றன ....! |
| உறங்கப் போனால் |
| கனவில் நீ வருவாய் |
| என விழித்திருத்தலும் .... |
| தெருவில் நீ வருவாய் |
| என உறங்கப்போவதும் ... |
| மரணத்திற்கும் |
| வாழும் ஆசைக்கும் |
| இடைப்பட்ட மரண சுகமடி |
| நீ ...! |
| காதல் ஒரு ... |
| காதுகளற்ற ... |
| கண்களற்ற .. |
| மூளையற்ற மாற்றுத்திறனாளி ...! |
| வாழ்கை என்பது |
| வாழ ஊக்கமளிக்கும் |
ஊன்று கோள் ...!
ஊன்று கோளாய்
நான் உனக்கும் ...
நீ எனக்கும் ...!
இறுதிவரை
துணைபோவோமா ...?

