மரண சுகமடி நீ எனக்கு ....!
மாம்பழத்து வண்டைப்போல் |
தடம் காட்டாமல் |
உள் புகுந்தவளே ....! |
வண்டைப்போல் உயிர் |
குடிக்கிறாய் ... |
உயிர் குடிக்கும் அந்த |
மரண சுகம் வேண்டி |
போதை வஸ்த்து அடிமையைப்போல் |
உன்னை தேடுகிறேன் ... |
எனது ஒவ்வொரு |
கணமும் உன் நினைவுகளால் |
நிறைந்த்திருக்கிறது ... |
நீ நிறைந்திருக்கும் |
எனது கணங்கள் |
என்னை வாழ தூண்டுகின்றன ....! |
உறங்கப் போனால் |
கனவில் நீ வருவாய் |
என விழித்திருத்தலும் .... |
தெருவில் நீ வருவாய் |
என உறங்கப்போவதும் ... |
மரணத்திற்கும் |
வாழும் ஆசைக்கும் |
இடைப்பட்ட மரண சுகமடி |
நீ ...! |
காதல் ஒரு ... |
காதுகளற்ற ... |
கண்களற்ற .. |
மூளையற்ற மாற்றுத்திறனாளி ...! |
வாழ்கை என்பது |
வாழ ஊக்கமளிக்கும் |
ஊன்று கோள் ...!
ஊன்று கோளாய்
நான் உனக்கும் ...
நீ எனக்கும் ...!
இறுதிவரை
துணைபோவோமா ...?
3 comments:
அருமையான வித்தியாசமான
புதுமையான உவமை
வண்டின் இருப்பும் துளைப்பும்
மாம்பழத்திற்கு மட்டும்தானே தெரியும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ம்... அழகிய கவிதை...
..காதல் ஒரு ...
காதுகளற்ற ...
கண்களற்ற ..
மூளையற்ற மாற்றுத்திறனாளி ...!..
உண்மையான வரிகள்...
Post a Comment