Pages

Posted on: Thursday, July 23, 2009

நாலு விராட்டியும், ஒரு தீ பெட்டியும்........!






நாலு விராட்டியும், ஒரு தீ பெட்டியும்........!


இரண்டாவது
தாலியாய்
நிறுவன அடையாள அட்டை....!

தவணை முறை
வசதிகளை உதறிவிடவும்
மனமில்லை ...!


வாழ்க்கை
எப்பொழுதும்
முன் பதிவுசெய்த
இருக்கையாய்
அமைந்துவிடுவதில்லை ....

சில சமயம்
காத்திருப்போர் பட்டியலில் ....!

பல சமயம்
முன் பதிவில்லாத இருக்கையில்...

அடுத்த நிறுத்தத்தில்
அமர்ந்திருப்பவர் எழுந்ததும்
அந்த இருக்கை நமக்குத்தான்
என்ற நம்பிக்கையில் ...!

பயண முடிவில்
இருக்கை
வேறு ஒருவருக்கு... !

முதல் வகுப்பில்
பயணித்தாலும்...
முன் பதிவில்லா இருக்கையில்
பயணித்தாலும்...

தேவைப்படுவது
நாலு விராட்டியும்,
ஒரு தீ பெட்டியும் தான்....!

அதுகூட
இன்று சுருங்கி
ஒரு பொத்தானாய் போனது ...!

அடுத்த நொடி
நிச்சயமில்லாதபோது
இந்த நொடியில்
வாழத்தெரியாமல்
அடுத்தவருடன் தன் வாழ்வை
ஒப்புமை படுத்தி
சுயம் தொலைத்து
வேஷம் கட்டவே காலம்
போதவில்லை .... !

நன்றி தினகதிர் வாரகதிர் - செப்டம்பர்,13,2009

8 comments:

gkn said...

Kavithaien unarvukalukku photo melum valimai serkirathu

கலையரசன் said...

நெஞ்சம் வலிக்கிறது..
வார்தையில் தெரிக்கிறது..

ப்ரியமுடன் வசந்த் said...

//அடுத்த நிருத்தத்தில் //

திருத்திவிடவும் பெஸ்ட் கவிதைங்க........

நையாண்டி நைனா said...

thathuvam.!!!!

குடந்தை அன்புமணி said...

கருப்பொருள் நன்றாக இருக்கிறது நண்பா. ஆனால் கவிதையை சற்று இன்னும் சீர்படுத்தினால் அழகாக இருக்கும்... வாழ்க்கையைப் போலவே...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி !!!!! gkn
நன்றி !!!!!கலையரசன்
நன்றி !!!!!பிரியமுடன்.........வசந்த்
நன்றி !!!!!நையாண்டி நைனா
நன்றி !!!!!குடந்தை அன்புமணி

"உழவன்" "Uzhavan" said...

//சுயம் தொலைத்து
வேஷம் கட்டவே காலம்
போதவில்லை .... ! //

எல்லோரும் ஏதோ ஒரு முகமூடியை அணிந்துதான் வாழவேண்டியுள்ளது.
விராட்டினா என்ன கவிஞரே?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி உழவன் !

பேச்சு தமிழில் "வரட்டி" என்று அழைப்பார்கள். மாட்டின் சாணத்தில் வட்ட வட்டமாய் தோசை போல் தட்டி வெயிலில் காயவைத்து எடுப்பது!

இதை கோயிலில் பொங்கல் வைக்க மற்றும் உடல் எரிக்க அதன் புனிதம் கருதி பயன் படுத்துவார்கள் ...

மேலும், அதன் சிறப்பை சொல்லுவதானால், வாழை பழம் இரண்டு நெருப்பில் மட்டும் தான் பஸ்ப்பம் ஆகும், ஒன்று நமது வயிற்று நெருப்பில் மற்றொன்று விராட்டி நெருப்பிற்கு...!

Post a Comment

 
Tweet