ஏக்கம்...!
நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம் விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!
நீ உன் புதுக்கணவனிடம்
சுட்டிக்காட்டினாய் ,
"அந்த இடத்தில்லிருந்து தான்
ஒரு பைத்தியக்காரன் தினம்
என்னை பார்த்து
சிரித்தான்" என்று ....
தவறு ஒன்றும்
இல்லை, சகியே...!
நான் அங்கு
இருக்கிறேனா என்று
"ஒரு கணம்
"
பார்த்துவிட்டு
பேசியிருக்கலாம்.....!
இருட்டு ...!
வெறுமையான இரவுகள்....
துணைக்கு உன் நினைவுகள் ...
அழகாய் தெரிந்தாள் ....
இருட்டு!
6 comments:
ஆஹா அருமை. ஒரு முறை எழுத்துப் பிழை பாருங்கள் ப்ளீஸ். நல்ல கவிதை நெருடுகிறது.
//"அந்த இடத்தில்லிருந்து தான்
ஒரு பயித்தியக்காரன் தினம்
என்னை பார்த்து
சிரித்தான் ...."//
அட...சூப்பர்மா....
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
ஆஹா....சுப்பர்
அருமையான வரிகள் நண்பரே.....ரசித்து படித்தேன்....
அனுபவித்து எழுதியது போலவே.....
Rmba nallayirukku!
//தவறு ஒன்றும்
இல்லை, சகியே...!
நான் அங்கு
இருக்கிறேனா என்று
"ஒரு கணம்
"
பார்த்துவிட்டு
பேசியிருக்கலாம்.....!//
இதுதான் பண்பட்ட ஆணின் மனம். எப்போதும்
அதைப் புண்படுத்துவதே பெண்ணின் குணம்.
Post a Comment