கந்தக தீபாவளி ...!
பட்டாசு வெடித்து
தீபாவளி கொண்டாடுங்கள்...!
பட்டாசு சத்தம்
கந்தக பிஞ்சுக்களின்
கால் வயிற்று கஞ்சி...!
கந்தக கிடங்கில்
கருகிய மொட்டுக்களின்
பச்சை இரத்த வாசம்...
மகரந்த கனவுடன்
மொட்டோடு கருகிய
எதிர்கால....
மருத்துவர்...!
பொறியாளர்...!
விஞ்ஞானி ....!
கந்தக குளத்தில்
தன் சந்ததியாவது
மலரும் என்ற நம்பிக்கையில்,
பல செடிகள்
தலைமுறை,
தலைமுறையாய்.....
மலடாய்...!
விடிந்தால்
தீபாவளி....
எங்களுக்கும் தான்....!
கந்தகம் வெடித்து
சிதறும் சத்தத்தில்
எங்கள்
வயிறு சிரிக்கும்...!
கங்கா ஸ்நானம்
செய்யாவிட்டாலும்
கங்கைக்கு ஒன்றும்
பாதகமில்லை....
பட்டாசு சத்தம்
உங்களுக்கு வேடிக்கை...!
எங்களுக்கு
கால் வயிற்று கஞ்சி...!
8 comments:
"கந்தக குளத்தில்
தன் சந்ததியாவது
மலரும் என்ற நம்பிக்கையில்,......
"கந்தகத்தீபாவளி" கவலை கொள்ள வைக்கிறது.
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
நல்ல சிந்தனை
வாழ்த்துக்கள்
விஜய்
பட்டாசு வெடித்து
தீபாவளி கொண்டாடுங்கள்...!
பட்டாசு சத்தம்
கந்தக பிஞ்சுக்களின்
கால் வயிற்று கஞ்சி...!//
நல்ல சிந்தனைத்தான்...ஆனால் இது குழந்தை தொழிலாளர்களை ஆதரிப்பது போல் உள்ளது தோழரே!
பட்டாசினால் சுற்று சூழல் கேடு மிக அதிகம்.
பட்டாசினால் விபத்து... உயிரிழப்பு நேரிடும்.
பட்டாசினால் ஏழைகளின் பெறுளாதாரம் இழப்பு.
பட்டாசினால் தான் பல சிறுவர்களின் எதிர் காலம் கெடுகிறது இல்லையேல் கொஞ்சமாவது கல்வி கற்க முற்படுவார்கள் என்பது என் எண்ணம்.
கவிதையின் ஓட்டம் நன்று. கருத்தில் எனக்கு உடன்பாடில்லை... நன்றி.
எதனை தரம் சொனாலும் எதனை பேர் சொனாலும் பட்டாசு நிக்கவா போகுது. மறுப்பு தெரிவிப்பதை விட மாற்ரத்தை எப்படி கொண்டு வரலாம் என்று ஜோசிபோமா
என்ன்றாவது ஒரு நாளைக்குத்தானே கந்தக தீபாவளி?
நாள்தோறும் co2தீபாவளி கொண்டாடுறேமே அதுக்கென்ன சொல்றீக?
சரவணன்,இனிய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
பட்டாசு சத்தத்தில தீபாவளி கொண்டாடிப் பழகிவிட்டோமே தவிர,சூழலை அசுத்தப்படுத்தும் தீபாவளிதானே !
கந்தகத் தீபாவளி மனதை கனக்கச் செய்து விட்டது.
சுற்றுப்புற மாசு, குழந்தைகள் இதில் ஈடுபடுத்தப் படுவது போன்ற காரணங்களால் நானும் பட்டாசு வாங்குவதில்லை. இந்தப் பதிவை உங்களுக்கு நேரம் வாய்த்தால் பாருங்கள்: http://tamilamudam.blogspot.com/2008/09/blog-post_18.html
இந்தச் சிறுவர்களின் வாழ்க்கை சீராக வேண்டும் என்பதே பலரின் ஆதங்கமும்.
Post a Comment