Pages

Posted on: Thursday, December 17, 2009

திருக்கல்யாணம்..!




திருக்கல்யாணம்..!




ஆலயங்களில்
திருக்கல்யாணம்
வருட, வருடம்
தவறாமல் நடக்கிறது...

தவறாமல்,
தாமாகவோ ...
கட்டாயத்தாலோ ...
எல்லா
முதிர் கன்னிகளும்
கலந்து கொள்கின்றனர் ...
தனக்கும் திருமணம்
நடக்க வேண்டும் என்று..!

ஆனால்,
யாரும் நினைவு கூறுவதில்லை ...
தான் கும்பிடும்
கடவுளுக்கு
திருமண சடங்கை
உருவாக்கியவன் ,
வரதட்சணை முறையை
மட்டும் அங்கு
புகுத்தாதலால் தான் ....

திருக்கல்யாணம்
வருட, வருடம்
தவறாமல் நடக்கிறது...!

7 comments:

ஹேமா said...

ம்ம்...சரியாச் சொல்லியிருக்கீங்க.
சிந்திக்க எத்தனை பேர் !?

சீமான்கனி said...

யோசிக்க வேண்டிய விஷயம் நண்பா...அருமை வாழ்த்துகள்...

vasu balaji said...

நல்ல கருத்து.

Paleo God said...

நல்ல கருத்து நண்பரே ... மற்ற கவிதைகளும் அருமை...:-)) வாழ்த்துக்கள்.

Chitra said...

சரிதான்............ என்னமா யோசிக்கிறீங்க.

ராமலக்ஷ்மி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் சரவணக்குமார்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சிந்தனை அருமை - வரதட்சணை ஒழிய வேண்டும் = அதற்கு மக்கள் மனம் மாற வேண்டும் - இயலுமா

Post a Comment

 
Tweet