Pages

Posted on: Monday, April 5, 2010

குமுதம் வார இதழில் எனது பயணம்...

நன்றி குமுதம் 07/04/2010


பயணம்


சந்தோசமாய் காரில் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்ட வசந்திக்கு சரவணனின் நடவடிக்கை எரிச்சலை தந்தது.
டிரைவருடன் வழியெங்கும் சகஜமாக சிரித்து, சிரித்து பேசியபடியே வந்தவன் ஓட்டலில் தங்களுடனே உணவருந்த வைத்தான். ஹைலைட்டாக டிரைவருக்கும் சேர்த்து ஓட்டலில் ரூம்போட்டபோது பொங்கி விட்டாள் வசந்தி.

"என்னங்க இது? டிரைவரையும் சரி சமமா நம்மோட சாப்பிட வைத்துக்கொண்டு..?"

" நம்ம குடும்பத்தோட உயிரையே டிரைவர் கைல கொடுத்துவிட்டு நாம சந்தோசமா பயணிக்கிறோம். அப்போ அவரை சரி சமமா நடத்தினால் என்ன தப்பு?"

"அதில்லைங்க. டிரைவரோட பேசிக்கொண்டே வர்றீங்க..."

" நாம பேசிக்கொண்டே வந்தால் டிரைவரால தூங்க முடியாது. அதனால இரவுல நாம பாதுகாப்பா பயணம் செய்யலாம். அவங்களும் மனிதர்கள் தான். நம்மளோட இப்படிப் டிரைவரா வரும்போது, நாம குடும்பத்தோட இப்படி போக முடியலியேன்னு அவங்க மனசுல ஏக்கம் வரலாம். அதுல கவனம் சிதறினால் நமக்கு தானே ஆபத்து? என்ன சொல்ற வசந்தி"

"சரிங்க. நாளைக்கு டிரைவர் அண்ணாவோட எங்க பாகிறோம்?"

சரவணன் சிரிக்க, வசந்தி வெட்கத்தில் அவன் தோளில் ஐக்கியமானாள்.

7 comments:

Ramesh said...

ஏற்கனவே குமுதத்தில் படித்தேன்...நன்றாக இருந்தது.

vasu balaji said...

நல்லா இருக்குங்க:)

துபாய் ராஜா said...

அருமையான பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

அருமையா இருக்கு சரவணா...தொடரட்டும் வாழ்த்துகள்...

"உழவன்" "Uzhavan" said...

அருமை.. வாழ்த்துகள் நண்பரே

நாமக்கல் சிபி said...

குட்!

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. வாழ்த்துக்கள்.

Post a Comment

 
Tweet