கலர் கனவுகள்...!
வானமகள்
வெட்கமில்லாமல்
மின்னலாய் பல் இளித்து
போனாள்...!
வானுயர மாளிகையை
கட்டிய தொழிலாளி
ஒதுங்க இடமின்றி
கட்டிட செல்வ செழிப்பை
பறை சாற்ற
நட்ட குரோட்டன்ஸ் வகை
மரங்களுக்கு இடையே
மரமாய் ஒட்டி
அன்னாந்து பார்த்து
தனக்குள் வியந்தான்....
இது நான் கட்டிய
கட்டிடமாக்கும் ....!
குடை பழுது நீக்குபவன்
பிறர் மழையில் நனையாமல்
இருக்க,
தன் வயிறு நனைய...
மழையில் நனைந்தபடி குடை
பழுது பார்த்துக் கொண்டிருந்தான்...!
இங்கே,
வேதாந்தம் கூட
சுகமாய் உணரப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு...?
இந்த
ஒரு வார்த்தைதான் ....
தாய் மடியாய்,
கலர் கலர் கனவுடன்
சுகமாய் தூங்க வைக்கிறது ...
விடியலில் வேதாந்தம்
பசியின் முன்
காணமல் போக,
எதுவுமே பெரிதாய்
தெரியவில்லை ...
உணவையும்...
ஆறுதல் தரும்
பொய் கனவுகளையும் தவிர....!
7 comments:
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் நண்பா...
எங்க போங்க! இப்பல்லாம் கனவுகளும் ப்ளாக் அண்ட் வொயிட்லதான் வருது!
//வானுயர மாளிகையை
கட்டிய தொழிலாளி
ஒதுங்க இடமின்றி
கட்டிட செல்வ செழிப்பை
பறை சாற்ற
நட்ட குரோட்டன்ஸ் வகை
மரங்களுக்கு இடையே
மரமாய் ஒட்டி
அன்னாந்து பார்த்து
தனக்குள் வியந்தான்....
இது நான் கட்டிய
கட்டிடமாக்கும் ....!///
ரசனையான கவிதை கலர் இன்னும் கொஞ்சம் சேர்த்து இருக்கலாம் சரணவன் வாழ்த்துகள்...
வாரமலரிலேயே படிச்சிட்டேன்பா. அதில் திருநின்றவூர்-னு போட்டிருந்திச்சா... நீங்கதானான்னு ஒரு சந்தேகம். வாழ்த்துகள்.
நன்றி Robin
நன்றி கே.ஆர்.பி.செந்தில்
நன்றி விந்தைமனிதன்
நன்றி சீமான்கனி
நன்றி குடந்தை அன்புமணி
நல்லாருக்கு எஸ் ஏ சி. புக்ல வந்ததை அப்படியே ஸ்கேன் பண்ணிபோடாம ஏதாவது ஓவியமோ,ஃபோட்டோவோ சேர்த்து போடுங்களேன்.கூடுதல் கவர்ச்சி.(அங்கே மட்டும் என்ன வாழுதுனு கேட்கக்கூடாது.)
Post a Comment