Pages

Posted on: Monday, October 18, 2010

கர்ப்பம் தரித்த நினைவுகள் ....!






கர்ப்பம் தரித்த நினைவுகள்....!




கோவில்​வேப்ப மரத்தில்
குழந்தை கனவுடன் கட்டப்பட்ட
துணித்​தொட்டில்களைப்​போன்ற
உன் நினைவுகளில்
என் இதயம் தாய்மை
அடைந்து தவிக்கிறது…!

உன் ​மெளன​மொழியில்
என் தாய் மொழி
மறந்து​போயின…!

நீ உதடு குவித்து
காற்றில்
பறக்க விட்ட முத்தங்களுடன்
வாழ்ந்து வருவதால் ….
மற்றவர்கள் சூழ்ந்திருக்க
விதவனைப்​போல்
தனி​மைப்பட்டு நிற்கிறேன்…!

மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
போதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகளை
என்னுள் கிளிறிவிட்டு
போய்விடுகிறது ….!

உன் காந்தப்பார்வை
நிழல் நினைவுகள்
நிஜமாகாதா என்ற ஏக்கம்
சுகமான சுமையாகவே
என்னுள்
உனனோடு ….!

நிஜமின்றி நிழல் இல்லை…!
நிழல் இன்றி நிஜமில்லை …!

கர்ப்பம் தரித்த
நினைவுகளுடன்
காலம் ​போகும் முன்னே
நம் பிள்ளைகளை
கொஞ்ச நீ
வருவாயா....?

3 comments:

Chittoor Murugesan said...

தலை!
வார்த்தை கரெக்டு தான் ஆனால் "கர்பம் தரித்த"ன்னு படிக்கிறச்ச லேபர் வார்டு ஞா வருது. "கருக்கொண்ட"ன்னு மாத்திப்பாருங்களேன்

இது ஜஸ்ட் ரோசனை தான் .எடுத்தா எடுங்க விட்டா விடுங்க

நிறைய எழுதுங்க தூள் கிளப்புங்க.

Unknown said...

அருமை சரவணா அருமை.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி Chittoor.S.Murugesan

நன்றி கே. ஆர்.விஜயன்

Post a Comment

 
Tweet