Posted on: Thursday, December 9, 2010
சிற்றிதழ் அறிமுகம் - முதற்சங்கு
இலக்கியம் என்ற வார்த்தைக்கு பொருள் கொள்வதிலேயே எனக்கு நீண்ட தேடல்உண்டு.
பொருளாதாரத்தை ஆதாரமாககொண்ட பத்திரிக்கைகளில் முதல் படியிலேயே தோற்று சிற்றிதழ்கள் பக்கம் சென்றால் அங்கு, ஈசல்களைப்போல் பல! அதற்குள்ளும் " யார் " (?!) இலக்கியம் என்ற ஆரோக்கியமற்ற சர்ச்சைகள்!!
இறுதியாக, அல்ல! அல்ல!! நல்ல தொடக்கமாக மலர்ந்திருக்கிறது முதற்சங்கு மாத இதழ், தரமான படைப்புகளோடு!
வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவரும், நமது பதிவருமான
ஐரேனிபுரம் பால்ராசய்யா முக்கிய இடம் பிடிக்கிறார். அவரது சமூக ஆராய்ச்சி கட்டுரைகள் நம்மை மலைக்க வைக்கின்றன!
அக்டோபர் இதழில் கணியான் இனத்தை குறித்த அவரது ஆராய்ச்சி கட்டுரையை படிக்க http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post.html
இங்கு கிளிக் செய்யவும்.
மாதம், மாதம் எழுத்தாளர்கள் அறிமுகம் என்ற பகுதியில் வளரும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார்,ஐரேனிபுரம் பால்ராசய்யா!
இலக்கியம் நாடுவோரின் தரமான இதழான முதற்சங்கிற்கு அனைவரும் ஆதரவுதர வேண்டுகிறேன்.
முகவரி
ஆசிரியர் திரு.சிவனி சி சதீஷ்
முதற்சங்கு
த,பெஎண்25 இரணியல் சாலை
தக்கலை 629 178
கன்னியாகுமரி மாவட்டம்
கைப்பேசி 9442008269
அக்டோபர் இதழில் அடியேனைப் பற்றி … .(பெரிய தாக்க மவுசை கிளிக்கவும்)
Labels:
saravanakkumar,
இலக்கியம்,
சமூகம்,
நிகழ்வுகள்,
முதற்சங்கு,
விமர்சனம்
4 comments:
உங்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் கிட்டியது எங்களுக்கு.
'முதற்சங்கு' அறிமுகத்துக்கும் நன்றி.
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
நல்ல விஷயம் செஞ்சிருக்கீங்க, முதற்சங்கு பற்றிய அறிமுகம் அசத்தல். ஆசிரியர் சிவனிசதீஷ் மிகவும் சந்தோஷப்படுவார்.
அறிமுகத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
Post a Comment