வீரிய மிகு வித்து....!
ஒரு மணிநேரத்திற்கு
விலை பேசினால்
-விலைமகள் ..!
ஆயுளுக்கும் விலை பேசினால்
-கணவன்..!
பத்து நிமிடம் உடலை
சுமப்பவளுக்கு கொடுக்கும்
அங்கீகாரத்தை கூட,
பத்து மாதம்
தன் விந்தை
சுமப்பவளுக்கு கொடுப்பதில்லை
இந்த அசிங்கம் பிடித்த சமூகம்...!
பதினாறில்
பெற்றவர்களின் சொல்லில்
சிறையாகி ...
இருபதில்
மூன்றுமுடிச்சில் சுயம் தொலைத்து...
ஆறுபதில்
தன் தொப்புள்கொடியே
பாரமாய் நினைக்கையில் ....
மரமாய் ...
மரம்
பூப்பதுண்டு ....
சூடிக்கொண்டதில்லை....
மரம்
காய்ப்பதுண்டு ...
புசிப்பதில்லை....!
அதனால்,
சில மரங்கள்
முதியோர் இல்லங்களில்...
வீட்டிற்கு ஒரு மரம்
வளருங்கள்...
ஆனால்,
பெண்களை மட்டும்
மரமாய் வேண்டாம்....
அடுத்த தலைமுறையின்
வீரிய மிகு வித்து
அவள் ....!
8 comments:
முதல் மழை?
>>
Your comment will be visible after approval.
ஹி ஹி பிரபல பதிவர்னா அப்படித்தான்.. கமெண்ட் மாடரேட் வைப்பாங்க.. கண்டுக்காத சி பி . ஹி ஹி
>>ஆயிளுக்கும் விலை பேசினால்
ஆயுளுக்கும் விலை பேசினால்
//சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை?//
இல்ல, வெள்ளம் சி பி! :) :)
//ஹி ஹி பிரபல பதிவர்னா அப்படித்தான்.. கமெண்ட் மாடரேட் வைப்பாங்க.. கண்டுக்காத சி பி . //
மிக்க நன்றி சி பி. (இத, இதத்தான் மோதர கையால கொட்டு படணும்பாங்க )
//ஆயுளுக்கும் விலை பேசினால்//
திருத்திவிட்டேன். நன்றி!
எல்லோரும் உணர வேண்டும்
ஆயுள் முழுவதற்கும் விலையா (அ) மற்றவற்றுடன் அவள் ஆயுளுக்கும் (உயிருக்கும்) விலையா?
இரண்டுமே பொருந்துகிறதோ?
Post a Comment