Pages

Posted on: Tuesday, June 2, 2009

ஓர் உணர்வின் உளறல் ....

தாய்மை ...!

அரை நிர்வானமாய் அவள் ....
கையில் பசியோடு குழந்தை ...
சுற்றிலும் கண்கள் ....
- தோற்று போனான் காமன்...!

---------------------------------

மனசு ...

அமைதி தேடி போன இடத்தில்
அமைதி இன்றி தவிக்கிறது மனம்...
கோவில் நடை பதையில்
யாரோ தவறவிட்ட
ஒற்றை ரூபாய் .....!

----------------------------

குற்ற உணர்ச்சி....

பணத்திற்கு ஆசைப்பட்டு
ஆள்காட்டி விரலில்
கரும் புள்ளி வைத்தேன் ....
கறை படிந்து  கிடக்கிறது மனசு ....!
---------------------------------


காதல் ...!

விழிமீன் தூண்டியலிட
இதயப்புழு
வழியப் போய்சிக்கி
கொள்கிறது ...!
-------------------------

விலைமகள் ...!

ஒரு ஜனுக்காக
எண் ஜானும் மரித்து போயி்ன ..!
கழுத்திற்கு கீழே கோடி கண்கள் ...!
கண்களுக்கு கீழே
துளிர்த்திருக்கும்
ஓர் துளியை யார் பார்ப்பார் ....?

8 comments:

மயாதி said...

அசத்தீட்டிங்க போங்க...

Anonymous said...

கலக்கல் கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள் தல.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி மயாதி
நன்றி இளைய கவி

உங்களின் ஊக்கம் என் எழுது கோளிற்கு மை தருக்கிறது ...நன்றிகள் பல பல..

நேசமித்ரன் said...

அருமை !
'விலைமகள் 'கவிதையில்
இருக்கும் ஒற்று மற்றும் எழுத்து பிழைகளை நீக்கினால்
நன்றாக இருக்கும்

Anonymous said...

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

பிழைகளை சுட்டி காட்டியதிற்கு நன்றி . மாற்றி விடுகிறேன் ...

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி தமிழ்குறிஞ்சி

"உழவன்" "Uzhavan" said...

அழகான கவிதைகள்!

Post a Comment

 
Tweet