தவிர்க்க முடியாத உணர்வுகள் ...
காலை சுற்றிய பாம்பாய்
கடித்துக் கொண்டுயிருக்கிறது
உன் நினைவுகள் ...
அது ஒரு கனாக்காலம்...
மார்கழிமாத குளிராய்
நீ போட்ட கோலம் ...
அழியாமல் தாண்டிபோகும்
கன நேரம்
உன் நாணம் கண்டு
என் கால்கள் தடுமாறும் ...
இதயத்தின் பரிபாசையை
புரிந்துகொண்ட நாம்,
பொருளாதார உறவுகளை
புரிந்துக்கொள்ளாததால் ....
அர்த்த நாரியின் பிள்ளை கனவாய் .....
காலம் ஒரு விளையாட்டுப் பிள்ளை ....
உலகம் உருண்டை ...!
நாம் இருவரும்
மறுபடியும், மறுமுனையில்
சந்தித்து கொண்டோம் ...
நான் முதலாவதாய் மணந்திருந்த
உன் நினைவுகளும் ...
நீ முதலாவதாய் மணந்திருந்த
என் நினைவுகளும் ...
ஊமைகலாய் தாண்டிப்போனார்கள் ....
காலத்தின் ஓட்டங்கள்
உடல்களை பிரித்திருக்கலாம் ...
ஆனால்,
மறக்க முடியாது ...
அந்த முதல் முத்தத்தையும் ...!
முதல் பார்வையையும் ...!!
தவிர்க்க முடியாது ...
நிகழ்கால கணவன் மனைவிக்கு
நடுவே
முன்றாவது ஆளாய் "அது "
படுத்து கிடப்பதையும் ....
நன்றி தினமலர் வாரமலர் - 23/08/2009
9 comments:
//நான் முதலாவதாய் மணந்திருந்த
உன் நினைவுகளும் ...
நீ முதலாவதாய் மணந்திருந்த
என் நினைவுகளும் ...
ஊமைகலாய் தாண்டிப்போனார்கள் ....
பின்னி பிணைந்த வரிகளில் உண்மை
யோவ் சீரியஸா சொல்றேன். என் மனசுல இருந்த பாரம் எல்லாம் நீங்கின மாதிர் ஒரு உணர்வு உங்க கவிதய படிச்சதுக்கப்புறம்
நன்றி இளைய கவி! உங்கள் மன பாரத்த இறக்கி வைக்க சுமை தாங்கியா இருந்ததுல ரொம்ப சந்தோசம் ...
இதயத்தின் பரிபாசையை
புரிந்துகொண்ட நாம்,
பொருளாதார உறவுகளை
புரிந்துக்கொள்ளாததால் ....
அர்த்த நாரியின் பிள்ளை கனவாய் .//
கவிதை நீரோட்டம் போல்
அழகாக உள்ளது!
I have invited you for a chain blog.
please visit http://naiyaandinaina.blogspot.com/2009/06/blog-post_03.html
//உலகம் உருண்டை ...!
நாம் இருவரும்
மறுபடியும், மறுமுனையில்
சந்தித்து கொண்டோம் ...
நான் முதலாவதாய் மணந்திருந்த
உன் நினைவுகளும் ...
நீ முதலாவதாய் மணந்திருந்த
என் நினைவுகளும் ...
ஊமைகலாய் தாண்டிப்போனார்கள் .... //
அருமையான வரிகள்! மனதைத்தொட்டுச் செல்லும் கவிதை! உங்கள் ஒவ்வொரு ஆக்கத்தையும் நேரம் எடுத்து வாசிக்கப்போகின்றேன்.
\\அர்த்த நாரியின் பிள்ளை கனவாய் .....\\
கொன்னுட்டீங்க போங்க..!
எப்பிடித்தான் யோசிக்கிறீங்களோ..!
இதே மாதிரி எனக்கு ஒன்னு எழுதித் தர்றீங்களா?
டீலிங் நமக்குள்ளயே இருக்கட்டும்.
நன்றி டக்ளஸ்.......
கவிதை என்பதே ஒத்த உணர்வுடையவர்களுக்கு தானே ...
மனித மனங்களின் வெளிப்பாடுதான் இக்கவிதை. நன்று
Post a Comment