Pages

Posted on: Tuesday, November 10, 2009

பிளாஸ்டிக் உயிர்கள்...!






பிளாஸ்டிக் உயிர்கள்...!





பிளாஸ்டிக் பூக்கள்
என்று தெரியாமல்
கண்ணாடி கதவுகளுக்குப்பின்
காதலுடன் கலர் கலராய்
பட்டாம்பூச்சிகள்…...

மகரந்த சேர்க்கை
செயற்கையாய் போனதால்
தானும்
பிளாஸ்டிக் பட்டாம்பூச்சியாய்
மாறவேண்டிய கட்டாயத்தில்
பட்டாம்பூச்சிகள்...

அறையெங்கும்
பிணங்கள் ...
அத்தனையும் உயிரோடு...!

குளிர்சாதன அறையுள்
அழகாய் பிளாஸ்டிக் மலர்கள்
அதன்மேல்
பிளாஸ்டிக் பட்டாம்பூச்சிகள்
அழகாய் சொருகப்பட்டு ...!

பஞ்சு நாற்காலியில்
அமர்ந்து மனித இயந்திரம்
இரசித்துக்கொண்டிருந்தது ...

தனக்கு தரப்பட்ட
இரண்டு நிமிட
இடைவேளையுள் ....!

6 comments:

vasu balaji said...

/அமர்ந்து மனித இயந்திரம்
இரசித்துக்கொண்டிருந்தது ...

தனக்கு தரப்பட்ட
இரண்டு நிமிட
இடைவேளையுள் ....! /

அருமை

கலகலப்ரியா said...

Pramaatham!

Rekha raghavan said...

அருமையான கவிதை. தலைப்பு பிரமாதம்.

ரேகா ராகவன்.

மணிஜி said...

நல்லாயிருக்கு நண்பரே

ராமலக்ஷ்மி said...

நன்றாக இருக்கிறது சரவணக்குமார்!

"உழவன்" "Uzhavan" said...

கலக்கலான கருத்து நண்பரே :-)

Post a Comment

 
Tweet