மூன்றாவது செவி ...!
படுக்கையில் கூட
இரண்டாவது மனைவியாய்
அருகாமை,
தவிர்க்க முடியவில்லை...!
எப்பொழுதும் உடனிருந்து
கட்டளையிடும்
எஜமானனாய் ...!
குனிந்து பெருக்கும்
எதிர் வீட்டு பெண்ணின்
கலைந்த ஆடைகளுக்கு
இடையே,
தவிர்க்க, தவிர்க்க
அனிச்சையாய் போகும்
கண்களைப்போல்...
இடைஞ்சலாய் உணர்ந்தாலும்
தவிர்க்க முடியவில்லை...!
சண்டை போடாத
மனைவியை அடைந்தவன் போல்,
வாழ்க்கை சுவராஸ்யம்
இழந்து போகிறது...!
சினுங்கா அலைபேசி
காதலி இல்லாமல்
கடற்கரை மணலில்
தனிமையில் காத்திருத்தல் போல்...!
7 comments:
/சினுங்கா அலைபேசி
காதலி இல்லாமல்
கடற்கரை மணலில்
தனிமையில் காத்திருத்தல் போல்...! /
:)). நல்லா இருக்குங்க.
சண்டை போடாத
மனைவியை அடைந்தவன் போல்,
வாழ்க்கை சுவராஸ்யம்
இழந்து போகிறது...!
.........எப்படியெல்லாம் யோசிக்க வைக்குறாங்க..........ஹா, ஹா, ஹா,.......
/சினுங்கா அலைபேசி
காதலி இல்லாமல்
கடற்கரை மணலில்
தனிமையில் காத்திருத்தல் போல்...! //அருமையான வரி
சண்டை போடாத
மனைவியை அடைந்தவன் போல்,..” அவனால சந்தோஷமா வண்டி ஓட்ட முடியுமா..?
கவிதை மிக அருமை.
சண்டை பிடிச்சத்தான் வாழ்க்கை சுவாரஸ்யம்.
இல்லாட்டி வெறும் சப்ன்னு இருக்கும்.
அடடே அலைபேசி...அமாம்ம்ம்ம்ம்...நிஜம்தான்....அருமை...
Post a Comment