Posted on: Monday, June 8, 2009
இரண்டாவது சுதந்திரம் .....
இரண்டாவது சுதந்திரம் .....
பசியின் முகவரி
தெரியாமல் என்
புரட்சிக்கவிஞன்
பத்து பதினைந்து தென்னைகளுக்கு
மத்தியில் காதல் கவி புனையவேண்டும் ....
அன்பாய் பிறப்பெடுத்த
என் பொக்கைவாய் அகிம்ஷா
தாத்தா நடுவீட்டில்
சாய்வு நாற்காலியில் அமர்ந்து
அளாவளாவி குதுகளிக்க வேண்டும் ...
என் முதல் குடிமகன்
குண்டு துளைக்கா கூண்டை
உடைத்து,
தைரியமாய் வெளிவந்து
சுதந்திர கொடி ஏற்ற வேண்டும் ....
சிறைச்சாலைகள்
சிறுவர் பூங்காக்களாக
மலர வேண்டும் ...
வல்லரசு இந்தியாவின்
ஓர் குடையின் கீழ் இவ்வுலகம்
வரவேண்டும் ....
அதை ஓர் தமிழன் வழிநடத்த வேண்டும் ....
அங்கே மனிதநேயம்
தாய்ப்பாசத்துடன் மலரும்....!
இன்றைய கனவு
நாளைய வெளிச்சம் ...!
இங்கே,
பாரதிக்கும் ..
சுபாசுக்கும் ...
காந்திக்குமா பஞ்சம் ...?
எழுந்து வாருங்கள்
இரண்டாவது சுதந்திரம்
வெகு தூரமில்லை ....
நன்றி தினகதிர் வாரகதிர் - ஆகஸ்ட், 9, 2009
Labels:
கவிதை,
சரவணக்குமார்,
தினகதிர்,
வாரகதிர்
3 comments:
கண்டிப்பாக வருவோம் தோழா!
சுதந்திர கோடி ஏற்ற வேண்டும் ....
(கொஞ்சம் பிழைகளை சரிபார்த்து, பதிவிடவும்! நன்றி!!)
//இங்கே,
பாரதிக்கும் ..
சுபாசுக்கும் ...
காந்திக்குமா பஞ்சம் ...?//
எழுந்து வாருங்கள்
இரண்டாவது சுதந்திரம்
வெகு தூரமில்லை ....
எழுத்தாளனுக்கு
இது மாதிரியான
உந்துதல் வரிகள் மிக அவசியம் சார்
நன்றி
ஓட்டுபட்டை மற்றும் இவ்வார தமிழர் பட்டையை இணைத்து விட்டேன். நன்றி
Post a Comment